நரை முடி கருமையாக வளர இதை மட்டும் செய்தால் போதும், உடனே ட்ரை பண்ணுங்க

Black Hair Tips: உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் வளர்ச்சி குறைந்தாலோ அல்லது ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டாலோ நரைமுடி வர காரணமாகும். அதேபோல் அதிகமான வேதி பொருட்கள் இருக்கும் ஷாம்பு மற்றும் இதர பொருட்களை பயன்படுத்துவதால் தலை முடி பாதிக்கப்பட்டு நரை முடி வருகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 3, 2023, 03:36 PM IST
  • தலைமுடிக்கு ஆயுர்வேத பொருட்கள்
  • வெந்தயப் பொடியும் பயனுள்ளதாக இருக்கும்
  • வெள்ளை முடி இயற்கையாகவே கருப்பாக முடியும்
நரை முடி கருமையாக வளர இதை மட்டும் செய்தால் போதும், உடனே ட்ரை பண்ணுங்க title=

பெரும்பாலும் முடியின் நிறம் கருமையாக இருக்கத்தான் எல்லோரும் விரும்புவது. ஆனால் மாசு அதிகரிப்பு மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை, மரபியல் காரணமாக பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே நரைமுடியை எதிர்கொள்கிறார்கள். பொதுவாக முடியின் நிறம் மெலனின் காரணமாகத்தான் கருப்பாக இருக்கிறது. இந்த மெலனின் மயிர்க்கால்களில் உருவாக்கப்படுகிறது. இது சருமம் மற்றும் முடியின் நிறத்தை பாதிக்கும். மெலனின் இரண்டு வடிவங்களில் உண்டு. ஒன்று யூ மெலனின் மற்றும் பியோமெலனின் ஆகும்.

முடி கருப்பு நிறமாக வைத்திருப்பது எப்படி யூமெலனின் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது கருப்பு அல்லது அடர்ந்த நிற முடி உண்டாகிறது. இதே போன்று ஃபியோமெலனின் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது இது வெளிர் நிற தோல் மற்றும் முடியை உண்டாக்குகிறது. அதேபோல் நாம் எடுத்துகொள்ளும் உணவு ஆரோக்கியம் உடலை போன்று கூந்தல் ஆரோக்கியத்திலும் பிரதிபலிக்கிறது. ஆரோக்கியமான உணவை பின்பற்றாத போது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு கூந்தலில் எதிரொலிகும். உடலில் வைட்டமின் ஈ, பி போன்றவை முன்கூட்டிய நரைக்கு வழிவகுக்கிறது.

மேலும் படிக்க | சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத பழக்கவழக்கங்கள்... முதலில் இதுக்கு முற்றுப்புள்ளி வைங்க!

இந்த நிலையில் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் உங்கள் தலைமுடியை கருமையாக்க விரும்பினால், நீங்கள் சாயமிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக கடுகு எண்ணெயுடன் சில பொருட்களை கலந்து முடியில் தேய்த்து வந்தால் கட்டாயம் பலன் கிடைக்கும். இந்த செயல்முறை என்ன என்பதும், அதை எப்படி தயார் செய்வது என்பதையும் இப்போது தெரிந்துக்கொள்வோம்.

செயல்முறை
* இரும்புக் கடாயை எடுத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அது நல்ல விளைவைக் தரும்.
* கடாயில் ஏதேனும் ஒரு பிராண்டின் 200 மில்லி கடுகு எண்ணெயை ஊற்றவும்.
* இந்த எண்ணெய் கடாயை மிதமான தீயில் வைத்து, அதில் 2 முதல் 3 டீஸ்பூன் ஹெர்பல் ட்ரை மருதாணி பொடியை சேர்க்கவும்.
* மருதாணியை நன்கு கலக்கவும், அதை 2 முதல் 3 நிமிடங்கள் சமைக்கவும்.
* இப்போது 1 டீஸ்பூன் நெல்லிக்காய் தூள் சேர்க்கவும், இது முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். கூந்தலின் பொலிவை பராமரிக்கவும், முடி பிரச்சனைகளை போக்கவும், வெள்ளை முடியை போக்கவும் இது உதவியாக இருக்கும்.
* இப்போது அதனுடன் ஒன்றரை முதல் இரண்டு தேக்கரண்டி வெந்தயப் பொடியைச் சேர்க்கவும். வேர்களில் இருந்து முடியை கருமையாக்குவதில் இது நன்மை பயக்கும்.
* பழுப்பு நிறமாக மாறும் வரை சமைக்கவும். இந்த முழு செயல்முறையும் 7 முதல் 8 நிமிடங்கள் ஆகும். இந்தக் கலவையை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். அது முற்றிலும் பழுப்பு நிறமாக மாறியதும், கேஸ்ஸை அணைக்கவும். அதன் பிறகு ஆற விடவும்.
* குளிர்ந்த பிறகு, அதை 12 முதல் 24 மணி நேரம் மூடி வைக்கவும்.
* 12 முதல் 24 மணி நேரம் கழித்து இந்த எண்ணெயை வடிகட்டவும். இந்த எண்ணெயை சில மாதங்களுக்கு சேமித்து வைக்கலாம்.
* இந்த எண்ணெயை ஷாம்பு செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன் தடவவும். வடிகட்டிய பின், ஒரு பருத்தி உருண்டையை எடுத்து, அதை முழுவதுமாக நனைத்து, முடியின் வேர்களில் தடவவும்.
* இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம். மேலும், இந்த எண்ணெய் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புரதச்சத்து உடலுக்கு மிகவும் அவசியம் ஆனால் அளவுக்கு மிஞ்சினால்? என்ன ஆபத்து?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News