Anemia Alert: இரத்த சோகையா? இரும்புச்சத்து குறைபாடா? இதை செய்து பாருங்க

Iron Deficiency Anemia: இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை  தொடர்புடைய அறிகுறிகள் மற்றும் பாதிப்பு தொடர்பான தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள். இது தொடர்பான தெளிவான யோசனை இருந்தால், பலவீனத்தைத் தவிர்க்கலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 28, 2023, 01:46 PM IST
  • இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகை
  • இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை பாதிப்பு
  • உடல் பலவீனத்தைத் தவிர்க்க ஆரோக்கிய டிப்ஸ்
Anemia Alert: இரத்த சோகையா? இரும்புச்சத்து குறைபாடா? இதை செய்து பாருங்க title=

Anemia And Anti Anemia Tips: ரத்த சோகை என்பது ரத்தத்தில் சிகப்பு ரத்த அணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை தசைகளுக்கு சுமந்து செல்கிறது. இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையால் பாதிக்கப்படுவது தொடர்பான தெளிவான தகவல்கள் தெரிந்து வைத்துக் கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆரோக்கியக் குறைபாடு ஏற்பட்டாலும், அதனை நன்கு நிர்வகிக்க தெரிந்திருப்பது அவசியம்.

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை மற்றும் அது நமது உடலில் ஏற்படுத்தும் தாக்கங்கள், பாதிப்புகள், விளைவுகளைத் தெரிந்துக் கொள்வோம்.  

இரத்த சோகை அறிகுறிகள்
இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை
இரத்த சோகையின் அறிகுறிகள்
இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையின் அறிகுறிகள்
 
இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை என்பது இரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் பாதிக்கப்படும் ஒரு நிலை. இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின், உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களில் இருந்து ஆக்ஸிஜனை நுரையீரலுக்குக் கொண்டு செல்கிறது. உடலில் இரும்புச் சத்து குறைவதால் ஹீமோகுளோபின் உற்பத்தி விகிதம் குறையும். 

மேலும் படிக்க | சர்க்கரை அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்கணுமா? இதை சாப்பிடுங்க போதும்

இரத்த சோகையின் அறிகுறிகள்
 இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சில அறிகுறிகள் பொதுவானவை. தீவிர சோர்வு,, ஆற்றல் இழப்பு, இதயத் துடிப்பு விகிதம் அதிகமாவது, சுவாசிப்பதில் சிரமம், தோல் வெளுத்துப்போவது, அதாவது சருமம் வழக்கத்தை விட வெளிறிப்போவது, மார்பு வலி, தலைவலி, தலைச்சுற்றல் , கை கால்களில் குளிர்தன்மை அதிகமாகுவது, நகங்கள் உடைந்துபோவது, பசியின்மை ஆகியவை பொதுவான அனீமியா அறிகுறிகள் ஆகும். 

ஹீமோகுளோபின் அளவை இயற்கையாக அதிகரிக்க வழிமுறைகள்
ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும். முட்டைக்கோஸ், கீரை, ப்ரோக்கோலி, வாழைத்தண்டு, வாழைப்பழம், மட்டி, டோஃபு போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். அதேபோல, வைட்டமின்-சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பது ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

இரத்த சோகை அபாயம் யாருக்கு அதிகமாக இருக்கும்?
இனப்பெருக்க வயதில் இருக்கும் பெண்களில் சுமார் 29 சதவீதத்தினரும், கர்ப்பமாக இருக்கும் பெண்களில் 36 சதவீதத்தினருக்கும் இரத்த சோகை பாதிப்பு அதிகமாக உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் பொதுவான உடல்நலப் பிரச்சினையான இரத்த சோகை இந்தியாவில் அதிகமாக உள்ளது. அதிலும் இந்தியாவைப் பொறுத்தவரை,15 வயதுக்குட்பட்ட பெண்களில் 46 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு ரத்தசோகை அதிக அளவில் உள்ளது.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்யும் உணவுகள் இவை தான்..! தினசரி சாப்பிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News