தட்டையான வயிறு வேண்டுமா? அப்போ இந்த பானத்தை தினமும் குடியுங்கள்

Reducing Weight: பெரும்பாலான பருமனானவர்கள் உடல் எடையை குறைக்க விரும்புகிறார்கள், ஆனால் இதற்கு அவர்கள் சரியான உணவு டயட் மற்றும் உடற்பயிற்சி முறையைப் பின்பற்ற வேண்டும், அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் உடல் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் இந்த பானங்களை உட்கொள்ளலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 11, 2023, 04:33 PM IST
  • பெரும்பாலான மக்களின் இன்றைய முக்கிய பிரச்சனை உடல் பருமன்.
  • உடல் எடையைக் குறைக்கும் பானங்கள்.
  • உடற்பயிற்சி முறையை பின்பற்ற வேண்டியாது அவசியமாகும்.
தட்டையான வயிறு வேண்டுமா? அப்போ இந்த பானத்தை தினமும் குடியுங்கள் title=

உடல் எடையைக் குறைக்கும் பானங்கள்: பெரும்பாலான மக்களின் இன்றைய முக்கிய பிரச்சனை உடல் பருமன். ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்க உணவு பட்டியல் மற்றும் உடற்பயிற்சி முறையை பின்பற்ற வேண்டியாது அவசியமாகும். நாள் முழுக்க ஓடிய பிறகு, ஜிம்மிற்குச் சென்று வியர்வை சிந்துவதற்கு அனைவருக்கும் போதுமான நேரம் இல்லை, இதற்கு என்ன செய்யலாம்?

தொப்பை கொழுப்பை குறைக்க வழிகள்
இந்த நிலையில் தொப்பை கொழுப்பை குறைக்க, நீங்கள் சில எடை இழப்பு பானங்கள் குடிக்கலாம், இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பானங்கள் என்றும் அழைக்கப்படுகிறது, இந்த பானங்களை நீங்கள் வீட்டில் எளிதாக தயாரித்து குடிக்கலாம், அவை எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | வேப்பிலையை இப்படி உட்கொண்டால் தொப்பையை வேகமாக குறைக்கலாம்!

1. பெருஞ்சீரகம் விதை நீர்
பெருஞ்சீரகம் பொதுவாக இயற்கையான வாய் புத்துணர்ச்சியாகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அதன் மூலம் எடையைக் குறைக்கவும் முடியும். ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வடிகட்டி குடிக்கவும். இது வயிற்று கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், செரிமானத்தையும் மேம்படுத்தும்.

2. எலுமிச்சை மற்றும் தேன் கலந்த தண்ணீர்
எலுமிச்சை மற்றும் தேன் கலவையானது எடை இழக்க சிறந்த வழியாக கருதப்படுகிறது. இந்த பானத்தை தயாரிக்க, முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரை லேசாக சூடாக்கி, அதில் ஒரு எலுமிச்சை சாற்றை பிழிந்து, அத்துடன் அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கவும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு வேகமாக கரையும்.

3. ஓமம் தண்ணீர்
உணவின் சுவையை அதிகரிக்க ஓமம் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் நீங்கள் விரும்பினால், அதன் மூலம் அதிகரிக்கும் எடையை வேகமாக குறைக்கலாம். இந்த பானத்தை தயாரிக்க, ஓமத்தை வறுத்து, ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வடிகட்டி குடிக்கவும்.

4. கிரீன் டீ
கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. கிரீன் டீ-யில் பூஜ்ஜிய கலோரி உள்ளது. கிரீன் டீ-யில் உள்ள காஃபின் உள்ளடக்கம் கொழுப்பை எரிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இரண்டு கிளாஸ் கிரீன் டீ அருந்துவது நல்லது. 

5. இளநீர்
இளநீர் அருந்துவது அனைவருக்கும் நல்லது. இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்திருக்கின்றன, இது உடலை எடையை கட்டுக்குள் வைத்திருக்க சிறந்தது. மேலும் இதில் வைட்டமின் சி, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சருமத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதேநேரத்தில் உடல் எடையை குறைபவர்கள் தங்களது ஊட்டச்சத்து இழப்பை ஈடுசெய்ய இளநீர் அருந்தி வரலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என சும்மாவாகவா சொன்னார்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News