காய்ச்சல், இருமல் அதிகமிருக்கா.... இந்த ஆண்டிபயாடிக்ஸ்களுக்கு நோ சொல்லுங்க!

தற்போது, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைகள் அதிகரித்து வரும், ஒரு சில ஆண்டிபயாடிக்ஸ்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 4, 2023, 07:04 AM IST
  • H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.
  • காய்ச்சல் ஒரு சில நாள்களிலேயே குணமாகும்.
  • இருமல், உடல் வலி ஆகியவை நீண்ட நாள்களுக்கு இருக்கும்.
காய்ச்சல், இருமல் அதிகமிருக்கா.... இந்த ஆண்டிபயாடிக்ஸ்களுக்கு நோ சொல்லுங்க! title=

தற்போது வானிலை மாற்றம் ஏற்பட்ட உடன், வைரஸ் காய்ச்சல் பல பகுதிகளில் அதிகரித்து காணப்படுகிறது. இது குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு நீடிக்கும். மேலும் காய்ச்சல் மறைந்தாலும், இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை புண் மற்றும் உடல் வலி போன்ற பிற அறிகுறிகள் தொடர்ந்து நீடிக்கும்.

இது முழுமையாக குணமடைய நீண்ட காலம் எடுக்கலாம். இதுபோன்ற, பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இருக்கலாம் என நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் (NCDC) தெரிவித்துள்ளது.

மருத்துவத்துறை தரப்பில் இருந்து கூறுகையில்," இந்த தொற்று பொதுவாக ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். மூன்று நாட்களுக்குள் காய்ச்சல் மறைந்துவிடும், ஆனால் இருமல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும். நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் தகவலின்படி, இந்த வழக்குகளில் பெரும்பாலானவை H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகும்". 

மேலும் படிக்க | Running Tips: ஓடிய பிறகு இதை சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்..!

இதில் மிகவும் கவனிக்கப்படக் கூடிய ஒன்று என்றால், இதில் இருந்து குணமடைய மக்கள் பயன்படுத்து, ஆண்டிபயாடிக்ஸ் தான். மேலும், இது சிக்கலை விளைவிக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆண்டிபயாடிக்ஸ் அளிக்காமல், அவர்களிடம் காணப்படும் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ கழகம் (IMA) அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ கழகம் பகிர்ந்த ட்வீட்,"ஆனால் இப்போது, மக்கள் azithromycin and amoxiclav போன்ற ஆண்டிபயாடிக்ஸ் எடுக்கத் தொடங்குகிறார்கள். அதுவும் டோஸ் போன்ற முக்கிய விஷயங்களை கவனிக்காமல் உட்கொள்கின்றனர். உடல் சற்று நன்றாக உணர ஆரம்பித்தவுடன் அதை நிறுத்திவிடாதீர்கள். ஆண்டிபயாடிக் எதிர்ப்புக்கு வழிவகுக்கும் என்பதால் இது நிறுத்தப்பட வேண்டும். ஆண்டிபயாடிக்கின் உண்மையான பயன்பாடு இருக்கும்போதெல்லாம், எதிர்ப்பின் காரணமாக அவை வேலை செய்யாது" என்று குறிப்பிட்டுள்ளது.

தவிர்க்கப்பட வேண்டிய ஆண்டிபயாடிக்ஸின் பட்டியல்

Azithromycin
Amoxiclav
Amoxicillin
Norfloxacin
Ciprofloxacin
Ofloxacin
Levfloxacin
Ivermectin

இந்த ஆண்டிபயாடிக்ஸின் அதிகப்படியான பயன்பாடு எதிர்ப்புக்கு வழிவகுக்கும் என்றும், ஆண்டிபயாடிக்குகளின் உண்மையான பயன்பாடு இருக்கும்போது, ​​எதிர்ப்பு காரணமாக அவை வேலை செய்யாது என்றும் இந்திய மருத்துவ கழகம் எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க | வைட்டமின்-ஏ குறைபாடுகள் இருந்தால் இந்த பாதிப்புகள் வரும்: இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News