Medical Miracle: இதய நோயை குணப்படுத்தும் புற்றுநோய் சிகிச்சை! எப்படி தெரியுமா?

இதயத்திற்கு கதிரியக்கம் நன்மையளிக்கும் என்று புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இதை மெடிகல் மிராகிள் என்றே சொல்லலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 20, 2022, 12:48 PM IST
  • இதய நோயை குணப்படுத்தும் புற்றுநோய் சிகிச்சை
  • கதிரியக்க சிகிச்சை சில வகை இதய பிரச்சனைகளை தீர்க்கும்
  • புதிய ஆய்வு தரும் நம்பிக்கைக் கீற்று
Medical Miracle: இதய நோயை குணப்படுத்தும் புற்றுநோய் சிகிச்சை! எப்படி தெரியுமா? title=

லண்டன்: பொதுவாக, புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலையின் காரணமாக, தற்செயலாக இதயத்தை காயப்படுத்தாமல் இருக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். 

ஆனால், இதயத்திற்கு கதிரியக்கம் நன்மையளிக்கும் என்று புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இதை மெடிகல் மிராகிள் என்றே சொல்லலாம்.   

 இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நற்செய்தி. இப்போது இந்த நோய்க்கு புதிய கதிரியக்க தொழில்நுட்பம் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கு மட்டுமே கதிரியக்க சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | கருவுறுதல் பிரச்சினையின் அறிகுறிகள்! ஆண்களுக்கும் பெண்களுக்குமானது!

எக்ஸ்ரே கற்றைகளின் பயன்பாடு
இந்த செயல்முறையானது ஃபோட்டான்கள் எனப்படும் உயர் ஆற்றல் கொண்ட எக்ஸ்ரே கற்றைகளை உள்ளடக்கியது, அவை சாதாரண துடிப்பை மீட்டெடுக்க இதயத்தின் ஒரு பகுதியில் இயக்கப்படுகின்றன.

இது ஆபத்தானதாகத் தோன்றினாலும், மற்ற எல்லா சிகிச்சைகளுக்கும் பதிலளிக்கத் தவறிய நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆரம்பகால ஆய்வுகள் தெரிவிக்கின்றன, மேலும் அறிகுறிகளில் குறைந்தது 90 சதவீத முன்னேற்றம் ஏற்படுகிறது.

treatment
இந்த கண்டுபிடிப்புகள் அற்புதமானவை என விவரித்த கைஸ் & செயின்ட் தாமஸ் மருத்துவமனையின் இருதயநோய் நிபுணர் பேராசிரியர் மார்க் ஓ நீல் (Professor Mark O'Neill, Consultant Cardiologist at Guys & St. Thomas Hospital), 'இதுபோன்ற முடிவை காண்பது அரிது... நாங்கள் நம்பமுடியாத நம்பிக்கையுடன் இருக்கிறோம்' என்று தெரிவித்தார்.

அதிக கதிர்வீச்சு
ஸ்டீரியோடாக்டிக் அபிலேடிவ் ரேடியோதெரபி அல்லது SABR எனப்படும் இந்த சிகிச்சையானது, உடலின் ஒரு சிறிய பகுதிக்கு கதிர்வீச்சின் விரைவான அளவை வழங்குகிறது, அதே நேரத்தில் சுற்றியுள்ள திசுக்களின் சேதத்தை கட்டுப்படுத்துகிறது, இவை, நுரையீரல் மற்றும் கல்லீரலில் அடைய கடினமாக உள்ள கட்டிகள் ஆகும்.

புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலையின் காரணமாக, தற்செயலாக இதயத்தை காயப்படுத்தாமல் இருக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.  

மேலும் படிக்க | திடீரென வரும் தலை சுற்றல், மயக்கம்: காரணம் என்ன?

ஆனால், தற்போது கதிரியக்க சிகிச்சை, இதயத்திற்கு ஆக்கப்பூர்வமாக உதவும் என்ற சங்கேதம் கிடைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

69 வயதான சூ, சோதனை செயல்முறைக்கு செல்லும் முடிவு தன்னுடைய சுயமான முடிவு என்று கூறுகிறார். சூவுக்கு மூன்று தசாப்தங்களாக இதயப் பிரச்சனைகள் உள்ளன. 2000 ஆம் ஆண்டில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன,

அவற்றில் பல இதயவால்வுகள் மாற்றப்பட்டுள்ளது. அதோடு இரட்டை பைபாஸ் அறுவைசிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. 2009 இல், அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | நோயை தடுக்கும் தக்காளி! 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியாவின் பாதிப்பும் ஏற்பட்டது.  இது ஐந்து முதல் 15 நிமிடங்கள் வரை நீடிக்கும், அநத சமயத்தில் அவரது இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 200 துடிக்கும். 

டிசம்பரில் SABR சிகிச்சையை மேற்கொண்ட பிறகு சூவுக்கு பக்கவாதம் ஏற்படவில்லை.இத்யத் துடிப்புக் கோளாறுகள் எனப்படும் அரித்மியா-வினால் (arrhythmias) இங்கிலாந்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைகளை அதிகரித்துள்ளது.  

இந்த நோயில், இதயத் துடிப்பு அபாயகரமானதாக மாறும். தற்போதைய கதிரியக்க சிகிச்சை ஆய்வு, பல்வேறு இதய துடிப்பு பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும், இன்னும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான கதவைத் திறக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இதுவரை இங்கிலாந்தில் 13 பேரிடமும், உலகம் முழுவதும் சுமார் 300 பேரிடமும் இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | புற்றுநோயின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News