Tomato for Health: நோயை தடுக்கும் தக்காளி! என் சமையலறையில் நீ தக்காளியா? எலுமிச்சையா?

தக்காளி சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன, இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 17, 2022, 09:11 AM IST
  • தக்காளியின் நோய் தடுப்பு சக்தி
  • தக்காளியும் புற்றுநோய் எதிர்ப்பும்
  • இது காயா இல்லை பழமா?
Tomato for Health: நோயை தடுக்கும் தக்காளி! என் சமையலறையில் நீ தக்காளியா? எலுமிச்சையா? title=

புதுடெல்லி: தக்காளியை சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் தக்காளி சாப்பிடுவதால் எந்தெந்த நோய்கள் ஏற்படாது என்பது தெரியுமா?  

தினமும் தக்காளியை உட்கொள்வதன் மூலம், தோல் புற்றுநோய் பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பீர்கள் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆம், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தக்காளியின் திறனை விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

புற்றுநோய்க்கு எதிராக தக்காளி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது?
தக்காளியின் அடர் சிவப்பு நிறத்திற்கு காரணமான கலவை சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

தக்காளி புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அவற்றை அகற்றவும் உதவியாக இருக்கும் என்றார். புதிய ஆய்வில் சிவப்பு தக்காளியில் கரோட்டினாய்டுகள் என்ற சத்து கட்டிகளைக் கரைக்க உதவுவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | விளக்கெண்ணெய் என்னும் ஆமணக்கு எண்ணெயின் அற்புத சக்தி

தக்காளி மருத்துவ குணங்கள் நிறைந்தது
தக்காளியில் உள்ள லைகோபீன் என்ற வேதிப்பொருள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது. ஆய்வின் படி, பழங்கள் அல்லது காய்கறிகளை மருந்து என்று சொல்ல முடியாது. ஆனால் அவற்றை உண்பதால் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைகிறது. 

மெலனோமா அல்லாத தோல் புற்றுநோயானது உலகில் மிகவும் பொதுவான தோல் புற்றுநோய் ஆகும். ஆண்டுதொறும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

FOOD

எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி 
ஓஹியோ மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த ஆய்வின் கீழ் எலிகள் மீது சோதனைகளை நடத்தினர். அவர் எலிகளின் இரண்டு குழுக்களை உருவாக்கினார். ஒரு குழுவின் உணவில் 35 வாரங்களுக்கு தக்காளி அதிக அளவில் சேர்க்கப்பட்டது. மற்றொறு குழுவிற்கு தக்காளி சேர்க்கவில்லை.

இதற்குப் பிறகு இரு குழுக்களும் புற ஊதா கதிர்களுக்கு இடையில் வைக்கப்பட்டன. தக்காளிப் பொடியை உணவாகக் கொடுத்த எலிகளுக்குப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது.

மேலும் படிக்க | உணவும் கட்டுக்கதைகளும்! ஆயுர்வேத நிபுணரின் விளக்கம்

தோல் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு
இந்த ஆராய்ச்சியில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில், தக்காளியின் பண்புகளை மனிதர்களிடம் சோதிக்கும் திட்டம் உள்ளது. தோல் புற்றுநோயை தவிர்க்க, சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு மிகவும் அவசியம். தக்காளியை உண்பதன் மூலம் இந்த நோய் ஏற்படுவதைக் குறைக்கலாம்.  

இந்த காய்கறிகளும் நன்மை பயக்கும்
தக்காளியைத் தவிர, புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் கொண்ட பல பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன. மிளகாய், கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றை உட்கொள்வதால் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம். 

மேலும் படிக்க | பிசைந்து வைத்த சாப்பாத்தி மாவை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது சரியா?

15 ஆண்டுகளாக 15 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. மறுபுறம், அடர் நிற காய்கறிகளை சாப்பிடுவது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை பெருமளவில் குறைக்கிறது.

சூரியனின் வெப்பத்தால் ஏற்படும் புண்களை குணப்படுத்த கரோட்டினாய்டுகள் உதவுவதாக மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. அவற்றை சாப்பிட்ட பிறகு, ஆக்ஸிஜனேற்ற கலவைகள் குறிப்பாக லைகோபீன் தோலில் படிந்து, புற்றுநோய் கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது. 

பெருங்குடல் புற்றுநோயைக் குறைக்கவும் தக்காளி உதவுகிறது என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டது. அக்ரூட் பருப்புகள் மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கின்றன. மறுபுறம், பூண்டு மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கிறது.

மேலும் படிக்க | புற்றுநோயின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News