இந்தியா கொரோனா தொற்றின் ஆபத்தான இரண்டாவது அலையில் சிக்கித் தவித்துக்கொண்டு இருக்கின்றது. மத்திய, மாநில அரசுகள், நெருக்கடி நிலையை சமாளிக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
தொற்று நோயாளிகளின் (Corona Virus) எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதால், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி பற்றாக்குறை போன்றவற்றை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தில்லி போலீஸ் நடத்திய சோதனையில், கடந்த 24 மணி நேரத்தில் தெற்கு தில்லியில் உள்ள பிரபலமான கான் மார்கெட் பகுதியில் உள்ள மூன்று உணவகத்தில் இருந்து 524 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மீட்கப்பட்டன.
மேலதிக விசாரணையில், இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவது கண்டறியப்பட்டது. இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் ரூ .70,000 க்கு அதிகமான விலையில் விற்கப்பட்டன என்பது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சோதனைகள் நடத்தப்பட்டு, ஆக்ஸிஜன் பதுக்கும் நடவடிக்கைகளை முறியடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
A lesson for all black marketeers and hoarders!
Team led by @prafulljha20 #KeepingDelhiSafe https://t.co/0lAOq083Gx
— DCP South Delhi (@DCPSouthDelhi) May 6, 2021
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4.14 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,915 பேர் இறந்தனர் என பதிப்வாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மே 7, 2021) தெரிவித்துள்ளது.
ALSO READ | தடுப்பூசி போடும் பணிக்கு இடையூறாகும் வகையில் லாக்டவுன் இருக்கக் கூடாது: PM Modi
இதுவரை, இந்தியாவில் மொத்தமாக 2,14,91,598 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,76,12,351 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2,34,083 பேர் இறந்துள்ளனர். தற்போது நாட்டில் 36,45,164 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக, தினசரி தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 4,00,000 என்ற அளவை கடந்து வருகிறது.
ALSO READ | Pfizer தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR