தடுப்பூசி போடும் பணிக்கு இடையூறாகும் வகையில் லாக்டவுன் இருக்கக் கூடாது: PM Modi

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை கோவிட் -19 தொற்றுநோய் தொடர்பான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்தார்.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 6, 2021, 07:13 PM IST
  • பிரதமர் நரேந்திர மோடி, கோவிட் -19 தொற்றுநோய் தொடர்பான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்தார்.
  • மாநிலங்களுக்கு சுமார் 17.7 கோடி தடுப்பூசிகள் (Corona Vaccine) வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,12,262 பேருக்கு புதிதாக கோவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் பணிக்கு இடையூறாகும் வகையில் லாக்டவுன் இருக்கக் கூடாது: PM Modi

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை கோவிட் -19 தொற்றுநோய் தொடர்பான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்தார். மேலும், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநிலங்களுக்கு உதவி அளிக்கப்படும் என உறுதி அளித்ததோடு, அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

மாநிலங்களுக்கு சுமார் 17.7 கோடி தடுப்பூசிகள் (Corona Vaccine) வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஒரு அறிக்கை கூறும் நிலையில், கோவிட் -19 தடுப்பூசி பல மாநிலங்களில் வீணடிக்கப்பட்டுள்ளது  குறித்து கருத்து தெரிவித்த, அவர், மாநிலங்கள் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் கூறினார். "லாக்டவுன் காரணமாக மக்களுக்கு தடுப்பூசி கொடுப்பதில்; இடையூறு ஏற்படாதவாறு இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களை மற்ற பணிகளுக்கு அனுப்பக் கூடாது" என்று அவர் மேலும் கூறினார்.

ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning

இதற்கிடையில், மருந்துகளின் இருப்பு குறித்தும் மோடி ஆய்வு செய்தார். ரெம்டெசிவிர் (Remdesivir)உள்ளிட்ட மருந்துகளின் உற்பத்தியை விரைவாக அதிகரிப்பது குறித்தும், பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கான ஆக்ஸிஜன் உதவி, அங்குள்ள படுக்கை வசதி ஆகியவை குறித்தும் பிரதமர் மறுஆய்வு செய்தார். 
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த மறுஆய்வுக் கூட்டத்தில்  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், பியூஷ் கோயல், மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,12,262 பேருக்கு புதிதாக  கோவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளது. 3,980 பேர் இறந்து விட்டனர்.  மொத்த கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 2,10,77,410 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 2,30,168 ஆகவும் உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம், வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ALSO READ | Pfizer தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News