சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!

பலருக்கு சருமம் பளபளப்பாக மின்ன வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jun 13, 2024, 11:44 AM IST
  • சரும பொலிவிற்கு டிப்ஸ்
  • ‘இந்த’ நீரை குடித்தால் போதும்
  • இதில் இருக்கும் பிற நன்மைகள் என்ன?
சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க! title=

நாம், என்ன நிறமாக இருக்கிறோம் என்பது அவசியம் இல்லை. முகம் பொலிவாக இருக்கிறதா, அந்த பொலிவு நம் முகத்திற்கு அழகு சேர்க்கிறதா என்பது மட்டும் கவனத்தில் இருக்க வேண்டும். முகப்பருக்களை தவிர்க்க, முகத்தில் ஆங்காங்கே இருக்கும் கருமையை நீக்க, முகம் வெளிர் நிறமாக மாறுவதை தடுக்க என அனைத்திற்கும் தனித்தனியாக சில க்ரீம்கள் இருக்கின்றன. இவற்றை தேர்ந்தெடுத்து முகத்திற்கு போடுவது சரியான தேர்வு என்றாலும், இயற்கையாக முகத்தை பாதுகாப்பதும் அவசியமாகும். 

துளசி நீர்:

உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் பானங்களுள் ஒன்று துளசி தண்ணீர். உடலில் தங்கும் நோய்களை விரட்ட, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என பல்வேறு விஷயங்களுக்கு துளசி பானம் உதவும். இதனை, சரும பளபளப்பிற்கும் பயன்படுத்தலாம்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

துளசி தண்ணீரைக் குடிப்பதால், சருமத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். துளசி நச்சுகளை நீக்குவதால் தெளிவான சருமத்தை பெறலாம்.  அதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கின்றன, அதே நேரத்தில் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தோல் அழற்சி மற்றும் சருமம் சிவப்பாவதை குறைக்கின்றன. இது மட்டுமன்றி, இன்னும் பல பண்புகளை கொண்டிருக்கின்றன. அவற்றை இங்கு பார்ப்போம். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

துளசி நீரை உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  துளசியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்திருக்கின்றன. இது, நோய் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடவும் உதவும். 

மன அழுத்தத்தை குறைக்கிறது:

துளசி தண்ணீர், அடாப்டோஜெனிக் எனும் பண்புகளைக் கொண்டிருக்கிறது. இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. துளசியில் உள்ள பயோஆக்டிவ் பண்புகள், மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்களை எதிர்த்து போராட உதவுவதாக கூறப்படுகிறது. 

செரிமானத்தை அதிகரிக்கிறது:

துளசி தண்ணீரை உட்கொள்வது, வழக்கமாக செரிமானத்தை தூண்டும் ஹார்மோன்களை அதிகரிக்கிறது. இது, வயிறு  உப்பசம், செரிமான கோளாறு, அமில ரிஃப்ளக்ஸ் ஆகியவற்றை தவிர்க்கிறது. 

சுவாச காேளாறை தடுக்கும்:

துளசியில் தண்ணீரில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு பண்களால் சுவாச காேளாரை தவிர்க்கலாம்  என கூறப்படுகிறது. நாசி மூலம் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும் சளி மற்றும் மூக்கடைப்பை நீக்க, இந்த துளசி நீர் உதவுகிறது. 

மேலும் படிக்க | கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!

இதய ஆரோக்கியம்:

துளசி தண்ணீர், உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கொலஸ்ட்ராலின் ஆக்சிஜனேற்ற பண்புகளை தவிர்க்க உதவுகிறது, மேலும், இரத்த அழுத்ததை குறைக்கவும் துளசி நீரை அருந்தலாம் என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. 

சிறுநீரகத்தை பாதுகாக்கிறது:

துளசி நீர், யூரிக் அமில செய்யல்பாட்டை அதிகரிப்பதில் இருந்து தடுக்கிறது. சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுகளை நசுக்கித்தள்ளவும் துளசி நீர் உதவுகிறது.

வாய் வழி சுகாதாரம்:

Oral Health-ஐ மேம்படுத்த, துளசி நீரை அருந்தலாம். வாயில் சொத்தை ஏற்படுத்தும், பற்களை அழிக்கும் பாக்டீரியாக்கள் அண்டாமல் தவிர்க்க துளசி நீரை அருந்தலாம். இது, வாய் நாற்றத்தையும் தவிர்க்க உதவுகிறது. 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வைட்டமின் பி12 மட்டுமில்லை! இந்த வைட்டமினும் உடலுக்கு முக்கியம் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News