Arm Fat: கையில் தொள தொளவென தொங்கும் தசையை குறைக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!

Arm Fat reduction Tips: பலருக்கு கைகளில் தசை தொங்கும், இதை நீக்க சில உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Feb 14, 2024, 07:23 PM IST
  • கைகளில் இருக்கும் தசைகளை இழக்க உடற்பயிற்சிகள்
  • இதனால் தோள்பட்டைகளும் பலமாகும்
  • இந்த உடற்பயிற்சிகளை எப்படி செய்ய வேண்டும்?
Arm Fat: கையில் தொள தொளவென தொங்கும் தசையை குறைக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்! title=

Arm Fat reduction Tips Tamil: உடல் பருமனுடன் இருக்கும் பலருக்கு, நிறைய தசைகளுடன் இருக்கும் அவர்களது கைகள் பல சமயங்களில் பாதுகாப்பற்ற, தாழ்வு மனப்பான்மை எண்ணத்தை உருவாக்கலாம். இப்படி இருப்பது எந்த விதத்திலும் தவறில்லை என்பதை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், அப்படி உடல் பருமனுடன் இருப்பவர்கள், இளைப்பதற்காக பல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்து கொண்டிருப்பர். அவர்கள் செய்யும் உடற்பயிற்சிகள் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நன்மை பயக்கும் என்றாலும், தனியாக கைதசைகளை குறைக்க நேரம் எடுக்கலாம். கை தசைகளை குறைக்க உதவும் ஈசியான வீட்டு உடற்பயிற்சிகளின் லிஸ்ட்..இதோ. 

சேர் டிப்ஸ்:

Chair Dips உடற்பயிற்சிகளை,வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இந்த உடற்பயிற்சி, கொழுப்பை கரைப்பதோடு மட்டுமன்றி கை தசைகளை குறைக்கவும் உதவும். கைகள், முதுகுப்பகுதி என இரண்டிற்கும் நன்மை பயக்கும் உடற்பயிற்சிகளுள் இதுவும் ஒன்று. இந்த வர்க்-அவுட்டை செய்ய மெத்தை அல்லது ஒரு நாற்காலியை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் கைகளை வைத்து தரையில் படாமல அமர்ந்து எழ வேண்டும். 

ஆர்ம் சர்கில்ஸ்:

Arm Circles உடற்பயிற்சி, இருப்பதிலேயே மிகவும் எளிய உடற்பயிற்சி முறையாகும். இதை செய்ய கைகளை இரு பக்கங்களும் நன்றாக நீட்டிக்கொண்டு வளைய வடிவில் சுழற்ற வேண்டும்.  இதை செய்யும் போது கையில் டம்புள்ஸ் வைத்துக்கொண்டால் இன்னும் பலன் கிடைக்கும். இதை தினசரி செய்தால் கை தசைகள் குறையும். 

புஷ் அப்ஸ்:

புஷ் அப், உடற்பயிற்சி சிறந்த மூச்சுப்பயிற்சியாகவும் கொழுப்பை கரைக்கும் உடற்பயிற்சியாகவும் அறியப்படுகிறது.  வயிற்று தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சியாக கருதப்படும் இது, செய்வதற்கு அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால், இந்த உடற்பயிற்சியை செய்தால் தொப்பையையும் குறைக்கலாம், கைகளில் இருக்கும் தசைகளையும் குறைக்கலாம். ஆரம்பத்தில் பாலன்ஸ் செய்வது கடினமாக இருப்பினும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய செய்ய இது பழகி விடும். இதை செய்ய உங்கள் முட்டி மற்றும் கைகளே பயன்படும். 

மேலும் படிக்க | இளம் வயதிலேயே அதிக நரைமுடியா? இந்த ஸ்பெஷல் எண்ணெய்யை யூஸ் பண்ணுங்க!

சிசர்ஸ்:

இது வெட்டும் கத்திரிக்கோல் அல்ல, படுத்துக்கொண்டு நம் கால்களை உபயோகப்படுத்தி செய்ய வேண்டிய உடற்பயிற்சியாகும். இது, கை தசைகளையும் தொடை தசைகளையும் எளிதில் குறைக்க உதவும். இதை செய்தால் நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்டை சீக்கிரமே எதிர்பார்க்கலாம். தரையில் படுத்துக்கொண்டு, கைகளை பின்புறமாக வைத்துக்கொண்டு கால்களை சிசர் போல முன்னும் பின்னும் நகர்த்த வேண்டும்.

ஹாஃப் மூன் ரொட்டேஷன்:

Half moon rotation எனும் உடற்பயிற்சி, கை தசைகளை விரைவில் இழக்கவல்லது. கையில் இருக்கும் தசைகளை குறைக்க மிகவும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாத உடற்பயிற்சி உது. இதனை மிதமான தீவிர உடற்பயிற்சி பிரிவில் சேர்த்து கொள்ளலாம். இந்த பயிற்சி செய்வதால் நமது தோள் பட்டையில் இருக்கும் பைசப்ஸ் மற்றும் ட்ரைசப்ஸ் தசைகள் வலுவாகும். கை தசைகளும் வேகமக இளைக்கும். இதை செய்ய, முதலில் கால்களை விரித்து தரையில் நிற்க வேண்டும். பின்பு ஒரு வலது கையால் வலது காலை அந்த பக்கத்திலேயே சாய்ந்து தொட வேண்டும். அப்படி தொடுவதற்காக வளையும் போது உங்களது கை மேல் நோக்கி இருக்க வேண்டும், கால் நேராக இருக்க வேண்டும், தரையில் இருக்க கூடாது. 

மேலும் படிக்க | தொப்பையை உடனடியாக குறைக்கணுமா? இந்த எளிய பயிற்சிகளை தினமும் செய்யவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News