இதயம் முதல் சருமம் வரை: ஆச்சரியப்படுத்தும் புளியின் ஆரோக்கிய நன்மைகள்!!

புளி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் செரிமானத்தை நன்றாக வைத்திருத்தல் மற்றும் இதயத்தை நோய்களிலிருந்து காப்பது என பலவித பணிகளை செய்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 2, 2021, 07:55 PM IST
  • புளி ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • புளி ஒரு நல்ல செரிமான சீர்படுத்தியாக பயன்படுத்தப்படுகிறது.
  • புளி சருமத்தை உள்ளிருந்து சுத்தப்படுத்த உதவுகிறது.
இதயம் முதல் சருமம் வரை: ஆச்சரியப்படுத்தும் புளியின் ஆரோக்கிய நன்மைகள்!! title=

புளி இந்தியாவில் நீண்ட காலமாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. இது ரசம், சாம்பார், சட்னி வகைகள், சாஸ் மற்றும் சில நேரங்காளில் இனிப்புகளை செய்வதிலும் பயன்படுகிறது. புளி நார்ச்சத்து நிறைந்தது, அதில் கொழுப்பும் இருப்பதில்லை. புளி உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. புளி ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

புளியால் பல வித ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. உடல் ஆரோக்கியத்திற்கு புளி எந்த வழியில் பயனளிக்கின்றது என பார்க்கலாம்: 

எடையைக் குறைக்க உதவும்

புளி சாப்பிடுவது எடையைக் குறைக்க (Weight Loss) உதவுகிறது. ஏனெனில் இதில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. கூடுதலாக, புளியில் ஹைட்ராக்சிசிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது அமிலேசைத் தடுத்து பசியைக் குறைக்கிறது. 

இதய நோய்கள் முதல் எதிர்ப்பு சக்தி வரை புளி பயனுள்ளதாக இருக்கிறது

புளி ஆரோக்கியத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிப்பது முதல் செரிமானத்தை நன்றாக வைத்திருத்தல் மற்றும் இதயத்தை நோய்களிலிருந்து காப்பது என புளி பலவித பணிகளை செய்கிறது. சி, ஈ மற்றும் பி வைட்டமின்கள் தவிர, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஃபைபர் ஆகியவையும் புளியில் ஏராளமாக உள்ளன. 

ALSO READ:ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கீரையின் அற்புத நன்மைகள் 

புளி செரிமானத்தை சீர்படுத்த உதவுகிறது 

புளி ஒரு நல்ல செரிமான சீர்படுத்தியாக பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இதில், டார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை உள்ளன. இது மலச்சிக்கலை போக்கவும் பயன்படுகிறது. புளியை உட்கொள்வதால், வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகின்றன. புளியில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 

நீரிழிவு நோயில் நன்மை பயக்கும்

புளி விதை சாறு இயற்கையில் அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கவும் நீரிழிவு (Diabetes) நோயாளிகளுக்கு கணைய திசு சேதத்தை தடுக்கவும் உதவுகிறது. புளியில் காணப்படும் ஆல்ஃபா-அமிலேஸ் என்ற நொதி இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

புளியால் சருமத்திற்கு நன்மை ஏற்படும்

உங்கள் முகத்தில் புள்ளிகளோ வடுக்களோ இருந்தால், புளியை பயன்படுத்துவது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புளியில் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் நிறைந்துள்ளன. புளி சருமத்தை உள்ளிருந்து சுத்தப்படுத்த உதவுகிறது.

ALSO READ:Toothache: பல் வலியா? உடனடி தீர்வு இதோ… 

ALSO READ: WHO vs Covaxin: கோவேக்சின் தடுப்பூசியை WHO விரைவில் அங்கீகரிக்கலாம்…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News