மியூஸ்லி சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு தயாராகிக் கொள்ளுங்கள்..!

மியூஸ்லி சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் மியூஸ்லி அதிகம் சாப்பிடுபவர்கள் இதனை கொஞ்சம் கருத்தில் கொள்வது நல்லது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 5, 2023, 09:42 PM IST
மியூஸ்லி சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு தயாராகிக் கொள்ளுங்கள்..! title=

இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பலர் தங்கள் உயிரை இழக்கிறார்கள். ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோயாளிகளாக மாறுகின்றனர். நமது கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரக்க முடியாதபோது, இதன் காரணமாக சர்க்கரையை குளுக்கோஸாக மாற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது.  இதனால் உண்டாகிறது நீரிழிவு நோய். ஒருவேளை நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உணவில் கவனம் செலுத்துவது நல்லது. அந்தவகையில் மியூஸ்லி சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | மடமடனு எடை ஏறுதா? இந்த சூப்பர் ட்ரிங்கை குடிங்க... சட்டுனு குறையும்!!

பொதுவாக அனைத்து மியூஸ்லிகளும் சர்க்கரை நோயாகளுக்கு ஆபத்தானவை அல்ல. இதில் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான நன்மைகளும் இருக்கின்றன. நீரிழிவு நோயாளிகள் கூட மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் ஆரோக்கியம் ஏதும் மோசமடையாது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு பொதுவாகவே நீரிழிவு நோய் ஆபத்து தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கும். அவர்கள் மியூஸ்லி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதில் கவனமாக இருப்பது அவசியம். 

அதேநேரத்தில் ஆரோக்கியமான மியூஸ்லியில் இருக்கும் ஊட்டச்சத்துகள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. இதில் இருக்கும் குளூக்கோஸ் மற்றும் மெக்னீசியம் இந்த வேலைகளை செய்கின்றன. அதேநேரத்தில் மார்க்கெட்டில் கிடைக்கும் ஆரோக்கியமற்ற அல்லது சர்க்கரை அளவு அதிகம் இருக்கும் மியூஸ்லிகளை நீங்கள் வாங்கி சாப்பிடும்போது நீரிழிவு ஆபத்து அதிகம். மியூஸ்லியில் செயற்கையாக சர்க்கரை அதிகமாக சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. உடல் நலனில் அக்கறை உள்ள அனைவரும் பொதுவெளியில் எத்தகைய உணவுகளை சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க |  மூளையை பலவீனமாக்கும் விட்டமின் B12 குறைபாடு! தவிர்க்க சாப்பிட வேண்டியவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News