பலவீனம், சோர்வை நீக்கி ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் ‘சில’ உணவுகள்!

சோர்வு மற்றும் பலவீனம் அதிகம் உள்ளதா... சில உணவுகளை ஊறவைத்து சாப்பிடுவது உடலுக்கு பலத்தை அளிக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 1, 2023, 02:44 PM IST
  • இரவில் தண்ணீரில் ஊறவைப்பது ஆற்றலை இரட்டிப்பாக்குகிறது.
  • சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
  • உணவில், ஊறவைத்த சில குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடத் தொடங்குவது மிகுந்த பலன் அளிக்கும்.
பலவீனம், சோர்வை நீக்கி ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் ‘சில’ உணவுகள்! title=

சேர்வு பலவீனத்தை விரட்டு உணவுகள்: நீங்கள் எப்போதும் சோர்வு, பலவீனம், சோம்பல் மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டால், இப்போது நீங்கள் உங்கள் உணவின் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது எனலாம். நீங்கள் உண்ணும் உணவில் இருந்து தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்களுக்கு கிடைக்காமல் போவதால உடலுக்கு சோர்வு ஏற்படுகிறது.  ஊட்ட சத்து நிபுணர்கள் இது குறித்து கூறுகையில், ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்ட பிறகும் நீங்கள் சோர்வு மற்றும் பலவீனத்தால் அவதிப்படுகிறீர்கள் என்றால், உங்கள் உணவில், ஊறவைத்த சில குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடத் தொடங்குவது மிகுந்த பலன் அளிக்கும் என்கின்றனர்.

பாதாம் போன்ற அன்றாடப் பொருட்களை இரவில் தண்ணீரில் ஊறவைப்பது அவற்றின் ஆற்றலை இரட்டிப்பாக்குகிறது. ஏனெனில் அவற்றில் உள்ள சத்துக்கள் அதிகரிக்கும். இவற்றை ஊறவைப்பதால் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிக்கிறது. சிறந்த விஷயம் என்னவென்றால், ஊற வைப்பதால், ஊட்டச்சத்துக்கள் செரிக்கப்படுவதைத் தடுக்கும் ஆக்சலேட்டுகள் மற்றும் பைட்டேட்டுகள் நீங்குகின்றன. உடல் சோர்வு பலவீனம் நீங்க எந்த எந்த பொருட்களை ஊற வைத்து உண்ண வேண்டும் என அறிந்து கொள்ளலாம்.

கசகசா என்னும் பாப்பி விதைகள்

கசகசா அல்லது பாப்பி விதைகள் ஃபோலேட், தியாமின் மற்றும் பாந்தோத்தேனிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளன. இந்த சத்துக்கள் உடலுக்கு பலம் கொடுக்க சிறப்பாக வேலை செய்கிறது. உடல் பருமனால் உங்கள் உடல் பலவீனமாகவும், மந்தமாகவும் இருந்தால், கண்டிப்பாக இந்த விதைகளை உட்கொள்ளுங்கள்.

வெந்தயம்

வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது குடலை சுத்தப்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது. இது புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். இது உடலுக்கு ஆற்றலையும் வலிமையையும் கொடுப்பதோடு, சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

ஆளி விதைகள்

ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. ஊறவைத்த ஆளி விதைகளை உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. ஆளியில் நார்ச்சத்தும் உள்ளது, இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

பாதாம்  பருப்பு 

பாதாமின் நன்மைகள் பற்றி அனைவரும் அறிந்ததே. அவற்றை ஊறவைத்து உண்பதன் மூலம் அவற்றின் ஊட்டசத்து மேலும் அதிகரிக்கிறது. பலவீனமான மற்றும் மெலிந்த மக்கள் அவற்றை உட்கொள்ள வேண்டும். புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் காணப்படுகின்றன. அவற்றின் நுகர்வு உயர் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் அதிக கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரித்து உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் காலையில் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்!

உலர் திராட்சை

உலர் திராட்சையில் இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிட்டால், உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். உலர் திராட்சையை உண்பதால், உடலில் இரத்த சோகை நீங்கி, சோர்வு மற்றும் பலவீனம் நீங்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

மேலும் படிக்க | மாரடைப்பின் ‘இந்த’ அறிகுறிகளை ஒரு போதும் அலட்சியம் செய்யாதீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News