Grapefruit: சாத்துக்குடி + ஆரஞ்சு கலவையின் அற்புதமான கனி! நோய் எதிர்ப்புப் பழம்

Grapefruit benefits: கிரேப் ஃபுரூட், வித்தியாசமான தனிச்சுவையை கொண்ட பழம், சோடியம், கொழுப்பு, குளுட்டன் போன்ற எதுவும் இல்லாததால் உடல் எடையை குறைக்க உதவுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 4, 2023, 08:39 AM IST
  • தனிச்சுவை கொண்ட கிரேப் ஃபுரூட்
  • உடல் எடையைக் குறைக்கும் பழம்
  • நீரிழிவைப் கட்டுப்படுத்தும் பழம்
Grapefruit: சாத்துக்குடி + ஆரஞ்சு கலவையின் அற்புதமான கனி! நோய் எதிர்ப்புப் பழம் title=

சத்தான பழங்களின் வரிசையில் கிரேப் ஃபுரூட் எனப்படும் சாத்துக்குடி ஆகும். பிற பழங்களை போலல்லாமல், இது ஒரு தனிச்சுவையை கொண்டுள்ளது. இதன் வாசனையும் ஊட்டச்சத்துக்களும் அனைவரையும் இந்தப் பழத்தை சாப்பிடத் தூண்டுவது. பொதுவாகவே, பழங்களை சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், சாத்துக்குடிப் பழத்தைப் போலவே இருக்கும் கிரேப் ஃபுரூட்  பழத்தின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்!
 
கிரேப் ஃபுரூட், வித்தியாசமான தனிச்சுவையை கொண்ட பழம், இதன் சுவையானது ஆரஞ்சு பழத்தில் இருப்பது போல இருக்கும். சோடியம், கொழுப்பு, குளுட்டன் போன்ற எதுவும் இல்லை என்பதுடன், வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டது கிரேப் ஃபுரூட். 

இந்தப் பழம் வெளிப்புறத்தில் ஆரஞ்சுப் பழத்தை ஒத்திருந்தாலும், உட்புறம் சாத்துக் குடியின் பழச்சுளைகள் போன்று காணப்படும்.  அவை வெள்ளை, இளஞ்சிவப்பு அல்லது பிங்க் என பல நிறங்களில் காணப்படுகின்றன. 

உடல் எடையை குறைக்க உதவும் கிரேப் ஃப்ரூட், நீரிழிவு நோயாளிகளில், இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் கிரேப் ஃபுரூட் ஒரு குறிப்பிடத்தக்க பங்கையும் குறைக்கிறது.  

மேலும் படிக்க | பச்சைத் தக்காளி சத்துக்களின் களஞ்சியமாகும் சிவப்பு தக்காளியை சாப்பிட மறந்துவிடுவீர்கள்

கிரேப் ஃபுரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
கிரேப் ஃபுரூட்டில் 92% நீர்ச்சத்து அதிகம் என்பதுடன், குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கொண்டதாகும். வைட்டமின் சி, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து என உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல சத்துக்களைக் கொண்ட ஊட்டச்சத்துப் பழம் ​கிரேப் ஃபுரூட்.

​நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிரேப் ஃபுரூட் 

வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, துத்தநாகம், தாமிரம் மற்றும் இரும்புச்சத்துக்களையும் கொண்ட இந்தப் பழம்,  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொற்று நோய்க்கு எதிராக நம்மளை பாதுகாத்து கொள்ள இந்தப் பழம் உதவுகிறது. .

​நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கிறது:

கிரேப் ஃபுரூட்டில் உள்ள சிட்ரஸ் சாறு உள்ளடக்கம், ஒரு நல்ல பிந்தைய செரிமான ஆன்ட்டாசிட் ஆக செயல்படுகிறது. இது சளி, இருமல் அல்லது காய்ச்சல் போன்ற பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது. மேலும், செரிமான செயல்முறையை சரியாக வைத்திருக்க கிரேப் ஃபுரூட் உதவுகிறது.

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கணுமா? இந்த 7 விஷயத்தை மட்டும் செஞ்சா போதும்!

உடல் எடையை குறைக்கும் பழம்
தினசரி கிரேப் ஃபுரூட் சாப்பிடுவதோ அல்லது அதன் சாற்றை பானமாக அருந்துவதோ உடல் எடையைக் குறைக்க உதவும். இதில் உள்ள அதிக ஊட்டச்சத்து மற்றும் நீர் உள்ளடக்கம் உடல் எடையை கட்டுக்குள் வைத்து, கட்டுக்கோப்பான உடல்வாகைத் தருகிறது. 

சருமத்தின் தரத்தை மேம்படுத்துகிறது
சருமம் வறண்டு போகாமலும், முதிர்வடையாமலும் இருப்பதைத் தடுக்கும் வகையில் சருமத்தை பாதுகாக்கிறது.

​நீரிழிவு நோயைத் தடுக்கும் கிரேப் ஃபுரூட்

கிரேப் ஃபுரூட் சாப்பிடுவது உடலில் உள்ள இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால், அதை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். டைப் -2 நீரிழிவு நோயைத் தடுக்கவும் உதவுகிறது.  

​இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கிரேப் ஃபுரூட்

கிரேப் ஃபுரூட்டை தொடர்ந்து சாப்பிடுவது இதய நோய்களின் அபாயங்களைக் குறைகின்றது. எடுத்துக்காட்டாக, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை இது குறைக்கின்றது. கிரேப் ஃபுரூட்டில் அதிகம் உள்ள பொட்டாசியம், இதயத்தின் நல்வாழ்வைப் பராமரிக்க உதவும் ஊட்டச்சத்து ஆகும். கிரேப் ஃபுரூட்டில் உள்ள நார்ச்சத்து இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.  

அதிகம் உள்ள ​ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் 

கிரேப் ஃபுரூட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை தடுக்க உதவுகிறது.

​காயங்களை குணப்படுத்தும் கிரேப் ஃப்ரூட்

காயத்தை குணமடைய செய்யும் வைட்டமின் சி உள்ள கிரேப் ஃப்ரூட், திசுக்களை சரிசெய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.  

​பசியைக் கட்டுப்படுத்துகிறது கிரேப் ஃப்ரூட்

நார்ச்சத்து நிறைந்த கரிமப் பொருட்களை உங்கள் உணவில் சேர்ப்பது, நீண்ட நேரத்திற்கு உங்களை முழுமையாக உணரச் செய்யும் பசியை அதிகம் எடுக்கச் செய்யாமல், உடல் எடையைக் குறைக்கும் என்பதோடு வயிற்றின் செரிமானத்தை மேம்படுத்தும்.

மேலும் படிக்க | ஒரு கப் இஞ்சி தண்ணீர் குடித்தால் சளி மற்றும் இருமல் எட்டிப்பார்க்காது

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News