Medicine Price: மக்கள் அதிகம் வாங்கும் மருந்துகளின் விலை குறைகிறது

அத்தியாவசிய மருந்துகள் விலையைக் குறைக்க மத்திய அரசு முடிவு! பொதுமக்களின் பட்ஜெட்டில் கணிசமான மாற்றம் வரும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 28, 2022, 10:17 AM IST
  • மருந்துகளின் விலை குறைகிறது
  • மக்கள் அதிகம் வாங்கும் மருந்துகளின் விலை குறைக்கப்படும்
  • பரிசீலனையில் மருந்துகளின் விலை
Medicine Price: மக்கள் அதிகம் வாங்கும் மருந்துகளின் விலை குறைகிறது title=

புதுடெல்லி: மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையை குறைக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

சர்க்கரை நோய் மற்றும் தொற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் மருந்துகள் உட்பட மக்கள் அதிகம் வாங்கும் விலை உயர்ந்த மருந்துகளின் விலையை குறைக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

அதாவது மக்கள் அதிகம் பயன்படுத்தும் மற்றும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மருந்துகளின் விலை குறைக்கப்படும். இதய பிரச்சனைகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ரத்த அழுத்தக் குறைவு, வைரஸ் தொற்று உட்பட அதிகம் பாதிக்கக்கூடிய நோய்களுக்கான மருந்துவிலை இனி குறையலாம்.

மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் மருந்துகள், தேசிய அளவிலான அத்தியாவசிய மருந்துகளாக (essential drug list india) மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. 

ALSO READ | ஓமிக்ரான் வகை கொரோனா உடலில் எத்தனை நேரம் இருக்கும்?

இந்த பட்டியலில் உள்ள மருந்துகளின் விலையை, என்.பி.பி.ஏ (National Pharmaceuticals Pricing Authority of India), எனப்படும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் கட்டுப்படுத்தி கண்காணித்து வருகிறது.

அத்தியாவசிய பட்டியலில் இல்லாத மேலும் சில முக்கியமான விலை உயர்ந்த மருந்துகளை இந்த பட்டியலில் சேர்க்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

அதேபோல, சில மருந்துகளின் விலையை குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு அதிகம் பரிந்துரைக்கப்படும், 'சிடாகிளிப்டின்' மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு பயன்படுத்தப்படும்,

ALSO READ | கொரோனாவின் அடுத்த திரிபு ஒமிக்ரானை விட வேகமாக பரவும்: WHO எச்சரிக்கை

'மெரோபெனம்' போன்ற விலை உயர்ந்த மருந்துகளின் விலைகளும் குறையும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இந்த நடைமுறையின்போதே, தற்போது மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படாத மருந்துகளையும்,அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இருந்தால் நீக்கவும் மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் குறைந்தால், அது மக்களுக்கு ஆசுவாசம் கொடுக்கும்.

ALSO READ | Food vs Omicron: ஓமிக்ரானை ஓட ஓட விரட்டும் உணவுகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News