ஒரே நாளில் கொலஸ்ட்ராலை குறைக்கும் பழங்கள்!

எளிதில் கிடைக்கக்கூடிய ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், பெர்ரி மற்றும் அவகாடோ போன்ற பழங்களை தினமும் உண்பதன் மூலம் உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க முடியும்.  

Written by - RK Spark | Last Updated : Nov 14, 2022, 05:20 AM IST
  • ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் உடலுக்கு நன்மைபயக்கிறது.
  • கெட்ட கொலஸ்ட்ரால் பலவிதமான ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடியது.
  • எளிதில் கிடைக்கக்கூடிய ஆப்பிளில் பெக்டின் சத்து அதிகம் உள்ளது.
ஒரே நாளில் கொலஸ்ட்ராலை குறைக்கும் பழங்கள்! title=

நமது உடலில் பெரும்பாலான கொலஸ்ட்ராலை கல்லீரல் தான் உற்பத்தி செய்கிறது, அந்த கொழுப்புகள் நாம் உண்ணும் உணவின் மூலம் கிடைக்கிறது.  மெழுகு போன்று நமது உடலில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ரால் ஆனது நமது உடலில் பலவிதமான ஆபத்துக்களை ஏற்படுகிறது, இருப்பினும் ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் உடலுக்கு நன்மைபயக்கிறது, எல்டிஎல் கொலஸ்ட்ரால் தான் நமது உடலில் மோசமான ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது.  மது அருந்துதல், புகை பிடித்தல், அடிக்கடி கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணுதல், ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் அதிக உடலுழைப்பின்மை போன்றவற்றின் மூலமாக நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகlரிக்கிறது.  உடலில் அதிகளவு எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் உடல் பருமன், மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற பலவிதமான ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடியது.  உடலில் நிரம்பியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் சுவையான சில பழங்கள் உள்ளது அவற்றை நாம் தினமும் சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க முடியும்.  கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க எந்தெந்த பழங்கள் உதவும் என்பதை பின்வருமாறு காணலாம்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயை விரட்ட ‘இந்த’ பழத்தின் விதைகளே போதும்! பயன்படுத்தும் முறை! 

1) ஆப்பிள் :

எளிதில் கிடைக்கக்கூடிய ஆப்பிளில் பெக்டின் சத்து அதிகம் உள்ளது, இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.  பெக்டின் என்பது ஒரு வகையான நார்ச்சத்து ஆகும், இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது இதுமட்டுமல்லாது ஆப்பிளில் உள்ள பாலிஃபீனால்களும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.

2) பேரிக்காய் :

ஆப்பிளைப் போலவே எளிதில் கிடைக்கக்கூடிய பேரிக்காய்களிலும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.  மேலும் இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. 

3) பெர்ரி :

சில பருவங்களில் அதிகளவில் கிடைக்கக்கூடிய பெர்ரி பழ வகைகளில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது மற்றும் இவை கெட்ட கொழுப்பின் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்க உதவுகிறது.  இந்த பழங்களை சாப்பிடுவது சருமத்திற்கும் நன்மையளிக்கிறது.

4) ஆரஞ்சு :

ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் வகை பழங்களில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது, இந்த பழங்களை தினமும் சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவு குறைக்கப்பட்டு உடலும், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

5. அவகாடோஸ் :

பெரும்பாலும் அவகாடோ பழங்கள் இந்திய மக்களிடத்தில் விலையுயர்ந்த பழமாக கருதப்படுகிறது, இந்த பழத்தில் உள்ள ஒலிக் அமிலம் இரத்த ஓட்டத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.  அவகாடோஸ் டோஸ்ட்கள் பெரும்பாலான மக்களிடம் பிரபலமான மற்றும் விருப்பமான ஒன்றாக இருந்து வருகிறது.

மேலும் படிக்க | இந்த 4 தவறுகள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News