அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அபாயத்தின் அறிகுறி: இந்த விஷயங்களில் கவனம் தேவை

Cholesterol Control Tips: அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு குறைப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்பது பற்றி பலருக்குத் தெரிவதில்லை. அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் சிலவற்றை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 16, 2022, 03:25 PM IST
  • இறைச்சி புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது.
  • ஆனால் சில பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது.
  • நிறைவுற்ற கொழுப்பை அதிகமாக உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை பாதிக்கிறது.
அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அபாயத்தின் அறிகுறி: இந்த விஷயங்களில் கவனம் தேவை title=

குறைந்த கொழுப்புள்ள உணவுகள்: கொலஸ்ட்ரால் பிரச்சனை இந்நாட்களில் அதிகமாக உள்ளது. உங்கள் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், முதலில் உங்கள் உணவில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதிக கொலஸ்ட்ரால் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு குறைப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்பது பற்றி பலருக்குத் தெரிவதில்லை. அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் சிலவற்றை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். 

கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதியில் உள்ளவர்கள், மருந்து மற்றும் உடற்பயிற்சியுடன், உணவிலும் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும். அன்றாடம் சாப்பிடும் மற்றும் குடிக்கும் சில பழக்கங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யும். அவற்றை பற்றி தெரிந்துகொள்வது மிக அவசியமாகும்.

இந்த விஷயங்களை கவனித்துக் கொள்ளுங்கள்:

1. கொழுப்பு இறைச்சியை தவிர்க்கவும்

இறைச்சி புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஆனால் சில பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது. நிறைவுற்ற கொழுப்பை அதிகமாக உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை பாதிக்கிறது.

2. இனிப்பான பொருட்களை குறைவாக உண்ணுங்கள்

இனிப்பு மற்றும் சர்க்கரை சேர்த்த பொருட்களை சாப்பிடுவதால் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் குறைகிறது மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். சர்க்கரை சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு பதிலாக இனிப்பு பழங்களை சாப்பிடுங்கள்.

மேலும் படிக்க | ’மாரடைப்பு பயம் வேண்டாம்’ கருப்பு அரிசியில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் 

3. நார்ச்சத்து நிறைந்த பொருட்களை உண்ணுங்கள்

உணவில் நிறைவுற்ற கொழுப்பு உள்ள பொருட்களைக் குறைத்து, நார்ச்சத்து நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். உங்கள் எடை மீண்டும் மீண்டும் அதிகரித்து, குறைந்தால், அது இருதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

4. இந்த விஷயங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

ஓட்ஸ், பார்லி, ஆப்பிள், பீன்ஸ், ஆளி விதைகள் மற்றும் சியா விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். போதுமான அளவு கரையக்கூடிய நார்ச்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள், இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

5. ஆரோக்கியமான கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்

உணவில் நிறைவுற்ற கொழுப்புள்ள உணவை உட்கொள்ளாதீர்கள். எனினும், உங்கள் தினசரி உணவில் மற்ற ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்க்க வேண்டியது மிக அவசியமாகும். நட்ஸ், அவகேடோ மற்றும் விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

6. காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும்

உணவில் அதிக அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோய் வந்துவிடுமோ என்ற அச்சமா? இந்த 'டிப்ஸ்' மூலம் அதை தடுக்கலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News