அடிக்கடி இந்த இடத்துல வலி இருக்கா? கொலஸ்ட்ராலாக இருக்கலாம்

Sings Of High Cholesterol: அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் இரத்த நாளங்களில் பிளேக் உருவாகி உங்கள் கால்களில் உணர்வின்மை ஏற்படும். இதனால் வலி மற்றும் அசௌகரியம், கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு போன்றவற்றை ஏற்படும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 14, 2022, 03:42 PM IST
  • கால், கைகளில் வலி கொலஸ்ட்ரால் அதிகரித்திருப்பதற்கான அறிகுறி.
  • கொலஸ்ட்ரால் படிவுகள் ரத்த ஓட்டத்தை தடை செய்கிறது.
  • வேலை செய்யும்போது கடுமையான வலி ஏற்படுகிறது.
அடிக்கடி இந்த இடத்துல வலி இருக்கா? கொலஸ்ட்ராலாக இருக்கலாம் title=

உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று, இவை அவ்வளவு எளிதாக அறிகுறிகளை வெளியில் காட்டிவிடாது. இருப்பினும் உடலின் மற்ற பாகங்களான கால்கள், கைகள், கழுத்து போன்றவை சில சமயங்களில் சில அறிகுறிகளைக் வெளிப்படுத்தும். இதனை கவனித்து தக்க சமயத்தில் நீங்கள் மருத்துவரை அணுகலாம். கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படாமல் விட்டால், மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவை ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது என்னென்ன அறிகுறிகள் வெளிப்படும் என்பதை காண்போம்.

மேலும் படிக்க | High Cholesterol: இந்த அறிகுறிகள் இருக்கிறதா? கொலஸ்ட்ராலாக இருக்கலாம் 

* கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​உடலின் ஒவ்வொரு பாகத்திலும் வித்தியாசமன அறிகுறிகளை காட்டும். மறுபுறம், கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​கால்களின் நரம்புகள் அடைக்கத் தொடங்கும். அதனால் பாதங்கள் கனமாக உணர ஆரம்பிக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கும் பாதங்களில் வலி பிரச்சனை இருந்தால், அதை அலட்சியப்படுத்தாதீர்கள்.

* கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது கால்களில் அடிக்கடி பிடிப்புகள் ஏற்படும் பிரச்சனை தொடங்குகிறது. அதேசமயம் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்யும் போது இந்த பிரச்சனை அதிகமாகும். அதே நேரத்தில், நீங்கள் தூங்கும் போது இந்த பிரச்சனை மேலும் அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், கால்களில் உள்ள பிடிப்புகள் பிரச்சனையை புறக்கணிக்காதீர்கள்.

* குளிர்காலத்தில் பாதங்கள் குளிர்ச்சியாக இருக்கும், ஆனால் உங்கள் பாதங்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருந்தால், இதுவும் அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாகும். இந்த அறிகுறிகள் கோடை காலத்திலும் தெரியும், எனவே, உங்களுக்கும் இதுபோன்ற பிரச்சனை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

* உங்கள் கால்களின் தோலின் நிறம் மாறினால், அதைப் புறக்கணிக்காதீர்கள், ஏனெனில் அதுவும் அதிக கொலஸ்ட்ரால் அறிகுறியாகும்.

* உங்கள் தமனிகளில் கொலஸ்ட்ரால் படிவுகள் படிந்து அடைப்பு ஏற்பட்டு எம்போலைசேஷன் சிண்ட்ரோம் ஏற்படும், இதனால் குளிர்காலத்தில் தோலில் நீலம் அல்லது ஊதா நிற வலை போன்ற வடிவங்கள் தோன்றலாம். 

மேலும் படிக்க | நொறுக்குத் தீனி சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? உண்மை என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News