உடம்பில் இந்த பகுதிகளில் வலி இருக்கா? கொலஸ்ட்ராலாக இருக்கலாம்!

உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் மற்றும் இஸ்கிமிக் இதய நோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 25, 2022, 06:21 AM IST
  • நமது உடலில் படியும் கெட்ட கொலஸ்ட்ரால் பல தீமைகளை ஏற்படுத்துகின்றன.
  • குறிப்பாக நடைபயிற்சி அல்லது படிக்கட்டுகளில் வலி மோசமடையக்கூடும்.
  • உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்திருப்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம்.
உடம்பில் இந்த பகுதிகளில் வலி இருக்கா? கொலஸ்ட்ராலாக இருக்கலாம்! title=

உடம்பில் பல்வேறு விதமான ஆரோக்கிய சிக்கல்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதிகளவில் கொலஸ்ட்ரால் உடலில் தங்குவதால் தான்.  உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் மற்றும் இஸ்கிமிக் இதய நோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக கூறியுள்ளது.  உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்வது இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கிறது.  நமது உடலில் படியும் கெட்ட கொலஸ்ட்ரால் உடல் தோற்றத்தில் எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை, ஆனால் இவை உடலுக்குள் பல தீமைகளை ஏற்படுத்துகின்றன.  ரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து ரத்த ஓட்டத்தை தடைபடுத்தி மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க | சருமத்தில் சொறி, அரிப்பு தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம் 

உடலில் தாங்குகின்ற அதிகப்படியான கொழுப்புகள் தமனிகளின் சுவர்களில் பிளேக் எனப்படும் கொழுப்பு படிவுகளை ஏற்படுத்துகிறது, இது தமனிகளை சுருக்கி, இதயம் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு இரத்தம் செல்வதை தடுக்கிறது.  அதிக கொலஸ்டராலால் உடலின் பகுதிகளுக்கு ரத்தம் சரிவர செல்லாமல் இடுப்பு, தொடைகள் அல்லது கன்று தசைகளில் வலி ஏற்படுகிறது.  அதிலும் குறிப்பாக நடைபயிற்சி அல்லது படிக்கட்டுகளில் ஏறுதல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது இந்த வலி உங்களுக்கு மேலும்  மோசமடையக்கூடும். 

மேலும் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்திருப்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம், உதாரணமாக கால் உணர்வின்மை அல்லது பலவீனம், கால்களில் துடிப்பு, கால்களின் தோல் பளபளப்பாக இருத்தல், காலின் தோல் நிறம் மாறுவது, கால் நகங்களில் வளர்ச்சியின்மை, கால்விரல்கள், கால்களில்   புண்கள் ஏற்படுவது, கைகளில் சில சமயம் வலி ஏற்படுவது, முடி உதிர்தல் போன்றவை ஏற்படலாம்.  உடலில் கொலஸ்ட்ரால் படிவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான், தினமும் உடற்பயிற்சி செய்வது, உணவு கட்டுப்பாடு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை போன்றவற்றை கடைபிடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News