அரிப்பு பிரச்சனைக்கான வீட்டு வைத்தியம்: மழைக்காலம் வெப்பத்திலிருந்து நிவாரணம் தருகிறது. ஆனால், இந்த காலத்தில் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இன்றைய காலக்கட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது சரும தொற்று. மழைக்காலத்தில் ஈரப்பதத்தால் வரும் வியர்வை மற்றும் மழைநீரால் சருமத்தில் சொறி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் மழைக்காலத்தில் ஏற்படும் தோல் நோய்த்தொற்றுகள் அல்லது சொறிகளிலிருந்து விடுபடலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எலுமிச்சை மற்றும் சமையல் சோடா பயன்படுத்தலாம்
இதன் பயன்பாட்டிற்கு, குளிப்பதற்கு முன் ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் சமையல் சோடா மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்யவும். இப்போது அதை தோல் முழுவதும் தடவி 10 நிமிடங்கள் அப்படியே விடவும். அதன் பிறகு, அதை தண்ணீர் கொண்டு கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால், அரிப்பு நீங்கும்.
மேலும் படிக்க | மழைகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் 4 பழங்கள்
சந்தன விழுது
சந்தனம் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதைப் பயன்படுத்த, சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து, அரிப்பு உள்ள இடத்தில் தடவவும். சிறிது நேரம் அப்படியே விட்டு விடுங்கள். மழைக்காலம் முழுவதும் இதை தொடர்ந்து செய்யுங்கள். இதனால் அரிப்பு பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
வேப்பம்பூவும் நல்லது
தோல் நோய்த்தொற்றுகளுக்கு வேம்பு ஒரு சஞ்சீவியாக கருதப்படுகிறது. அவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இது பல வகையான தோல் பிரச்சினைகளை நீக்குகிறது. இதைப் பயன்படுத்த, வேப்ப இலைகளை பேஸ்ட் செய்து, அரிப்பு உள்ள இடத்தில் தடவி, அது காய்ந்ததும், தண்ணீரில் கழுவவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ