கொலஸ்ட்ரால் அதிகமானால்... இந்த அறிகுறிகள் தோன்றும், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்!!

High Cholesterol Symptoms: அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் உடலில் காணப்படும் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 9, 2023, 05:59 PM IST
  • நரம்புகளில் கொலஸ்ட்ரால் குவிவதால், தடிப்புத் தோல் அழற்சியின் பிரச்சனை தொடங்குகிறது.
  • இது ஹைப்பர்லிபிடெமியா என்றும் அழைக்கப்படுகிறது.
  • இதில் தோலில் அரிப்பு, சிவத்தல், வறட்சி போன்றவை காணப்படும்.
கொலஸ்ட்ரால் அதிகமானால்... இந்த அறிகுறிகள் தோன்றும், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்!! title=

தமனிகளில் கொலஸ்ட்ரால் நிரம்பியிருப்பதைக் குறிக்கும் அறிகுறிகள்: உயர் இரத்தக் கொலஸ்ட்ரால் அல்லது ஹைபர்கொலஸ்டிரோலீமியா என்பது இன்று முழு நாட்டையும் பாதித்துள்ள ஒரு பிரச்சனையாக உள்ளது. இது மனிதர்களில் வேகமாகப் பரவும் நோயாகக் கருதப்படுகிறது. பொதுவாக கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது காணப்படும் அறிகுறிகளை நாம் புறக்கணிக்கிறோம். ஆனால் அபப்டி செய்வது பல ஆபத்துகளை விளைவிக்கக்கூடும். 

கொலஸ்ட்ராலில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன

LDL: Low Density Lipoprotein, அதாவது எல்டிஎல் கெட்ட கொலஸ்ட்ரால் என்று கருதப்படுகிறது. இதே கொலஸ்ட்ரால் தான் நமது தமனிகளில் குவிந்து கொண்டே இருக்கிறது. அதிக கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களை சாப்பிடுவதால், நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் உருவாகிறது. வறுத்த பொருட்கள் மற்றும் துரித உணவுகளில் பெரும்பாலான கொலஸ்ட்ரால் காணப்படுகிறது. மது அருந்துவதாலும், சிகரெட் பிடிப்பதாலும், நெய் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுவதாலும் கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. அதிகரித்த கொலஸ்ட்ரால் உடலில் இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளில் சேரத் தொடங்குகிறது.

HDL: High Density Lipoprotein அதாவது எஸ்டிஎல் நல்ல கொலஸ்ட்ரால் ஆகும். இரத்தத்தில் HDL அளவு அதிகமாக இருந்தால், அது உடலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. நல்ல ஆரோக்கியத்திற்கு HDL அளவைப் பராமரிப்பது அவசியம். 20 வயதை கடந்தவுடன் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மேலும், அவ்வப்போது சீரான இடைவெளியில் தொடர்ந்து செக் செய்யவும். 

அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் உடலில் காணப்படும் அறிகுறிகள்

தடிப்புத் தோல் அழற்சி: நரம்புகளில் அழுக்கு கொலஸ்ட்ரால் குவிவதால், தடிப்புத் தோல் அழற்சியின் பிரச்சனை தொடங்குகிறது. இது ஹைப்பர்லிபிடெமியா என்றும் அழைக்கப்படுகிறது. இதில் தோலில் அரிப்பு, சிவத்தல், வறட்சி போன்றவை காணப்படும். அரிப்பு காரணமாக ஏற்படும் தடிப்புத் தோல் அழற்சியால் நீங்கள் வேகமாக கீறினால், இரத்தமும் வெளியேறும்.

மேலும் படிக்க | மன அழுத்தம் தீர... மகிழ்ச்சி ஹார்மோனை தூண்டும் ‘சில’ உணவுகள்!

கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், கண்களைச் சுற்றியுள்ள தோல் மஞ்சள் அல்லது வெளிர் ஆரஞ்சு நிறமாக மாறும். கண்களின் அருகில் உள்ள இடம் உயர்ந்து காணப்படும். கண்களைச் சுற்றியுள்ள தோலில் ஏதேனும் புதிய மாற்றங்களைக் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகி கொலஸ்ட்ராலைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள்.

தோலின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள்: கொழுப்பு அதிகமாக இருக்கும் போது, ​​உடலில் ஊதா அல்லது நீல நிற புள்ளிகள் தோன்றும். நரம்புகளின் அடைப்பு காரணமாக இது நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உடலில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதை அலட்சியம் செய்வது ஆபத்தானது. நீங்களும் இதுபோன்ற அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

வீக்கம்: அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களின் தோலிலும் வீக்கம் தெரியும். சில நேரங்களில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதாலும் வீக்கம் ஏற்படலாம். இதை கண்டிப்பாக அலட்சியம் செய்யக்கூடாது. 

கொப்புளங்கள்: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும். சிகிச்சைக்குப் பிறகும் உங்கள் உடலில் தோன்றும் கொப்புளங்கள் மீண்டும் மீண்டும் வெளியே வந்தால், உங்கள் கொலஸ்ட்ரால் அளவை உடனடியாகப் பரிசோதிக்க வேண்டும்.

விரல்களின் உணர்வின்மை: கை விரல்கள் மற்றும் கால்விரல்களின் நரம்புகளில் கொலஸ்ட்ரால் குவிவதால் நீங்கள் கூச்ச உணர்வை உணரலாம். இதன் காரணமாக, உங்கள் விரல்களில் குத்துவது போன்ற உணர்வு உங்களுக்கு இருக்கும். மேலும், சிலருக்கு விரல்களைச் சுற்றி எரியும் உணர்வும் அதிகமாக இருக்கும். இதுபோன்ற அறிகுறிகளை நீங்கள் கண்டால், இந்த சூழ்நிலையில் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது இதுபோன்ற அறிகுறிகள் தோன்றும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உடலில் காணப்படும் இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள், உடனடியாக அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் ஒரு கப் ஊறவைத்த 'இந்த' நீரை குடிங்க.. பலனெல்லாம் பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News