கொலஸ்ட்ரால் அளவை உடனடியாக குறைக்கும் 5 ஜூஸ் வகைகள்!

நீரிழிவு நோய் இருப்பவர்கள் எப்படி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவார்களோ அதேபோல கொலஸ்ட்ராலால் பாதிக்கப்பட்டவர்களும் அதன் அளவை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.  

Written by - RK Spark | Last Updated : Dec 10, 2022, 06:17 AM IST
  • கெட்ட கொலஸ்ட்ரால் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
  • இதனால் சில சமயங்களில் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
  • கொலஸ்ட்ராலால் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
கொலஸ்ட்ரால் அளவை உடனடியாக குறைக்கும் 5 ஜூஸ் வகைகள்! title=

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.  கெட்ட கொலஸ்ட்ரால் நமது உடலில் ஏற்படும் பலவிதமான பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது, இதனால் சில சமயங்களில் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.  அதுவே உடலில் இருக்கக்கூடிய நல்ல கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.  நீரிழிவு நோய் இருப்பவர்கள் எப்படி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவார்களோ அதேபோல கொலஸ்ட்ராலால் பாதிக்கப்பட்டவர்களும் அதன் அளவை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.  இப்போது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் 5 விதமான ருசியான பானங்களை பற்றி இங்கே காண்போம்.

மேலும் படிக்க | கல்லீரலை பாதித்து புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் கலப்பட டீ! கண்டுபிடிப்பது எப்படி!

க்ரீன் டீ:

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிரீன் டீ கெட்ட கொலஸ்டராலின் அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.  இதில் கேட்சின்ஸ் மற்றும் எபிகல்லோகேடசின் கேலேட்ஸ் போன்ற பொருட்கள் உள்ளன.   பிளாக் டீயும் கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது ஆனால் அதைவிட க்ரீன் டீ அதிக செயல்திறன் கொண்டது.

பெர்ரி ஸ்மூத்திகள்:

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்சத்து ஆகியவை பெர்ரிகளில் நிறைந்துள்ளன.  இதில் குறைவான கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன அதனால் அரை கப் குறைந்த கொழுப்புள்ள பால் அல்லது தயிர், குளிர்ந்த நீர் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளாக்பெர்ரிகள் அல்லது ப்ளூபெர்ரிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆரோக்கியமான ஸ்மூத்தியாக குடித்து வர கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

கோகோ பானங்கள் :

கோகோ ஃபிளவனால்கள் அடங்கிய 450 மி.கி பானத்தை தினமும் இரண்டு முறை என ஒரு மாதம் வரை உட்கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பின் அளவு குறைவதும், நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  ஆனால் சர்க்கரைகள் மற்றும் உப்புகள் சேர்க்கப்பட்ட சாக்லேட் பானங்கள் எடை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தக்காளி ஜூஸ் :

தக்காளியில் உள்ள லைகோபீன் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, தக்காளியை சாறாகப் பயன்படுத்தும்போது அதில் ​​லைகோபீன் அதிகரிக்கிறது.  இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

சோயா பால்:

இது பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும் கிரீம் அல்லது அதிக கொழுப்புள்ள பால் பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சோயா பால் குடிப்பது நல்லது.  இது கொலஸ்டராலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் படிக்க | குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? மருத்துவர்களின் அறிவுரை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News