Health Alert: கேரட் ஜூஸ் குடிச்சா தப்பா? உண்மையை தெரிஞ்சுகிட்ட குடிக்கவே மாட்டீங்க!

Health Alert For Carrot Juice: ஏன் கேரட் சாறு குடிக்கக்கூடாது? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? நன்மை தரும் பொருளே, தீமைகளையும் செய்தால்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 1, 2024, 09:06 PM IST
  • கேரட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டுமா?
  • மருத்துவர்கள் சொல்லும் உண்மைகள்
  • கண்ணுக்கு நல்ல கேரட் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்
Health Alert: கேரட் ஜூஸ் குடிச்சா தப்பா? உண்மையை தெரிஞ்சுகிட்ட குடிக்கவே மாட்டீங்க! title=

Harms Of Carrot Juice: காய்கறிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை. அதிலும், கேரட் பீட்ரூட் போன்றவை அள்ளி வழங்கும் ஊட்டச்சத்துக்கள், அவற்றை நமது தினசரி உணவில் ஒரு அங்கமாக மாற்றிவிடுகிறது. அதிலும், காய்கறி உண்ண விருப்பம் இல்லாதவர்களுக்கும் ஊட்டச்சத்து பலன்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவற்றை ஜூஸ் எடுத்து குடிக்கச் சொல்வது இன்றைய காலகட்டத்தில் முக்கியமான ஒரு வழிமுறையாக மாறிவிட்டது.

அதிலும் கேரட் சாறு அற்புதமான ஆரோக்கிய நலன்கலை வழங்கும் அற்புதமான ஊட்டச்சத்து காய்கறி ஆகும்.உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் வழங்குகிறது. கேரட் ஜூஸ் செய்யும்போது, அதில் கேரட் மட்டுமல்ல, வேறு சில பொருட்களையும் சேர்ப்பதால், கேரட்டின் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரித்துவிடுகிறது. 

அதனால் தான், மருத்துவர்கள் மற்றும் உணவியல் நிபுணர்களும் கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்கனிகளில் இருந்து எடுக்கும் சாறுகளை பருக பரிந்துரைக்கின்றனர்.

மேலும் படிக்க | Male UTI: பெண்களை விட ஆண்களுக்கு சிக்கலை அதிகம் ஏற்படுத்தும் நோய்களில் நம்பர் ஒன் எது?

வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடிப்பதால் பல ஊட்டச்சத்துக்கள் உடனடியாக உறிஞ்சப்படுகிறது. கேரட் சாறு உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.  உடல் ஆரோக்கியத்திற்கு ஆக்கப்பூர்வமான வகையில் உதவும் கேரட் ஜூஸ் குடிக்கக்கூடாது அல்லது குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும்?

அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய கேரட் சாற்றை சாப்பிடுவதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என்று சொன்னாலும், வேண்டவே வேண்டாம் என்று சொல்லவும் காரணங்கள் உள்ளன.

ஏன் கேரட் சாறு குடிக்கக்கூடாது?

பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள்: வீட்டில் கேரட் ஜூஸ் செய்து குடிப்பது ஆரோக்கியமானது. ஆனால், கடையில் விற்கும் பதப்படுத்தப்பட்ட கேரட் ஜூஸ்கள் உடலுக்கு நன்மைக்கு பதிலாக தீமையே செய்யும். கேரட் ஜூஸை பதப்படுத்த சேர்க்கப்படும் இரசாயனங்கள், சத்துமிக்க பானத்தின் நோக்கத்தை குறாஇத்துவிடுகிறது.

சுவையே பிரதானம்: கேரட்டின் சுவை காலநிலைக்கு ஏற்றவாறு மாறும் என்பது நமக்கு தெரிவதால், அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக நாம் வீட்டில் தயாரிக்கும் காரட் ஜூஸில் சுவை அதிகம் இருந்தாலும் குடித்துவிடுவோம். ஆனால், வணிக நோக்கத்திற்காக தயாரிக்கப்படும் ஜூஸ்களில் சுவையே பிரதானமானது என்பதால், அதில் செயற்கை சுவையூட்டிகள் சேர்ப்பார்கள். இது கேரட் ஜூஸ் குடிப்பதன் நோக்கத்தை சிதைத்துவிடும்.

மேலும் படிக்க | இந்த மூலிகைகளை சமைச்சு சாப்பிட்டா வேற லெவல்! அப்படியே சாப்பிட்டா ஆரோக்கியம் உறுதி

பேஸ்டுரைஸ்: பேஸ்டுரைஸ் செய்யப்படாத பழச்சாறுகளில் இளம் வயதினர், கர்ப்பிணிகள் அல்லது நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களும் இருக்கலாம்.

சர்க்கரை சத்து: கேரட்டில் சில இயற்கை சர்க்கரைகள் இருக்கிறது. சுத்தமான கேரட் சாறு குறைந்த சர்க்கரையைக் கொண்டிருக்கும், ஆனால் பதப்படுத்தப்பட்ட ஜூஸில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்களில் சர்க்கரையும் சேர்க்கப்பட்டிருக்கும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு பிரச்சனையைத் தரும்.

நார்ச்சத்து நீங்கிவிடுகிறது: அருமையான சத்து கொண்ட காய்கறியின் நார்ச்சத்து அனைத்தையும், ஜூஸ் செய்யும்போது வீணடித்துவிடுகிறோம். இதனால் கேரட் சாப்பிடும்போது கிடைக்கும் நன்மை, அதை ஜூஸாக செய்யும் போது இருப்பதில்லை. எனவே, கேரட்டை சாறாக குடிப்பதற்கு பதிலாக கேரட்டை சலாடாகவோ அல்லது காயாகவோ உட்கொள்வது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது).

மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை: இவைதான் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News