Male UTI: பெண்களை விட ஆண்களுக்கு சிக்கலை அதிகம் ஏற்படுத்தும் நோய்களில் நம்பர் ஒன் எது?

Urinary Tract Infections: சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) என்பது நமது சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய் உட்பட உங்கள் சிறுநீர் அமைப்பை பாதிக்கும் ஒரு நோய் என்றாலும், ஆண்களுக்கு இந்த நோய் ஏற்பட்டால் சிக்கல் அதிகமாக உள்ளது.  

பொதுவாக UTI எனப்படும் சிறுநீர்த் தொற்று ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  இருப்பினும், ஆண்களுக்கு யூடிஐ ஏற்பட்டால், அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்

1 /7

சிறுநீர் தொற்று என்பது மிகவும் சங்கடமான பிரச்சனை ஆகும். அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றுவது, சிறுநீர் கழிக்கும் எரிச்சல் உணர்வு, சிறுநீரில் துர்நாற்றம் ஆகியவை சிறுநீர் தொற்றுக்கான காரணங்கள் ஆகும். ஆண்களுக்கு சிறுநீர் தொற்று மிகவும் சிக்கலானதாக மாறிவிடுகிறது.

2 /7

சிறுநீர்ப்பை தொற்று மிகவும் வேதனையாகவும் சிரமமாகவும் இருக்கலாம். இருப்பினும், உங்கள் சிறுநீரகங்களுக்கு UTI பரவினால், அது குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

3 /7

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. வருமுன் காப்பதே சிறப்பு என்பதால், சிறுநீர்ப்பாதைத் தொற்று ஏற்படுவதற்கான  வாய்ப்புகளைக் குறைப்பது நல்லது

4 /7

சிறுநீர் கழித்துவிட்டு, ஆண்குறியை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால், அழுக்கு மற்றும் இறந்த செல்கள் முன்தோலின் கீழ் வளரும். இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா வளர்ச்சியை அதிகரித்து, இறுதியாக சிறுநீர் பாதைக்கு பரவுவதால் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படும். எனவே சிறுநீர் கழித்த பிறகு சுத்தம் செய்வது அவசியம் ஆகும்

5 /7

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு யூடிஐ தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

6 /7

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படும் தினமும் 7-8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வெளியேறும். எனவே, போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், உடலில் நீர்சத்தை சரியாக இருப்பதை உறுதி செய்வதும் அவசியம் ஆகும்  

7 /7

புரோஸ்டேட் விரிவாக்கம் சிறுநீர்க்குழாய் வழியாக சென்று இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. இதன் விளைவாக, சிறுநீர் கழித்தாலும், சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாகாது. இதனால் பாக்டீரியாக்கள் உடலில் நீண்ட காலம் இருக்கும். இது, ஆண்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்