2 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு Antibiotics கொடுக்கக்கூடாது, காரணம் தெரியுமா?

இரண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (Antibiotics) கொடுக்கக்கூடாது. மீறிக் கொடுத்தால்கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அவற்றைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 18, 2020, 07:52 PM IST
  • உடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சேகரிப்பை Antibiotics தற்காலிகமாக பாதிக்கின்றன
  • குழந்தைகளுக்கு நீண்டகால சுகாதார சிக்கல்களை Antibiotics ஏற்படுத்தக்கூடும்.
  • சிசுக்களுக்கு Antibiotics கொடுப்பதால் ஆஸ்துமா, உடல் பருமன், உணவு ஒவ்வாமை உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படலாம்
2 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு Antibiotics கொடுக்கக்கூடாது, காரணம் தெரியுமா? title=

இரண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (Antibiotics) கொடுக்கக்கூடாது. மீறிக் கொடுத்தால்கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அவற்றைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை என்று பெரும்பாலான குழந்தை மருத்துவர்கள் கருதுகின்றனர். ஆனால், ஒரு புதிய ஆய்வு இந்த நம்பிக்கைக்கு மாறாக இருக்கிறது. 

Antibiotics கொடுக்கப்படும் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பல்வேறுவிதமான நோய்கள், உடல் பருமன், ஒவ்வாமை போன்ற சிக்கல்களை சந்திக்கக்கூடும். ஒரு ஆராச்சியின் மூலம் பெறப்பட்ட இந்தத் தகவல்கள் மாயோ கிளினிக் ப்ரோசிடிங்ஸ் (Mayo Clinic Proceedings) என்ற மருத்துவ சஞ்சிகையில்   வெளியிடப்பட்டுள்ளது.  

இந்த ஆய்வை மேற்கொண்டஆராய்ச்சியாளர்கள் 14,500 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்தனர். அவர்களில், 70 சதவிகிதத்தினர் 2 வயதிற்குக் குறைவாக இருக்கும்போது குறைந்தபட்சம் ஒரு முறையாவது ஏதாவது ஒரு நோய்க்காக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றிருக்கின்றனர்.

ண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுத்து சிகிச்சைக் கொடுக்கப்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் குழந்தை பருவத்தில் பல்வேறு நோய்கள் அல்லது வேறுவிதமான உடல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். 

அதுமட்டுமல்ல, Antibiotics-இன் தீவிரம, குழந்தைகளின் வயது, Antibiotics கொடுக்கப்படும் அளவு, எவ்வளவு முறை கொடுக்கப்படுகிறது என்பது, மருந்துகளின் வகைகள், பாலினம் என பல காரணிகளைப் பொறுத்து Antibioticsஇன் விளைவுகள் மாறுபடுகின்றன என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறந்தனர்.

உடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சேகரிப்பை Antibiotics தற்காலிகமாக பாதிக்கின்றன என்றாலும், அவை குழந்தைகளுக்கு நீண்டகால சுகாதார சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். சிசுக்களுக்கு Antibiotics கொடுப்பதால் ஆஸ்துமா, உடல் பருமன், உணவு ஒவ்வாமை, கவனக்குறைவு, ஒவ்வாமை, நாசியழற்சி, செலியாக் (celiac) நோய் மற்றும் அடோபிக் டெர்மடிடிஸ் (atopic dermatitis) என பல பிரச்சனைகள் ஏற்படலாம்.  

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில் ஒருவரான Nathan LeBrasseur இவ்வாறு கூறுகிறார்:  “2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு  Antibiotics  கொடுக்கும் நேரம், அளவு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் வகைகளைப் பற்றி தீர்மானிக்கவும் இந்த கண்டுபிடிப்புகள் உதவியாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான மருத்துவ வசதியையும், அணுகுமுறைகளைத் தீர்மானிக்க எதிர்கால ஆராய்ச்சியை இலக்காகக் கொள்ளும் வாய்ப்பையும் இந்த ஆய்வு முடிவு வழங்குகிறது.”

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News