Kleptomania: திருடும் ஆர்வத்தை தூண்டும் கிளெப்டோமேனியா என்னும் உளவியல் நோய்..!!

கிளெப்டோமேனியா என்பது திருடும் ஆர்வத்தை தூண்டும் விசித்திரமான ஒரு மனநலக் கோளாறாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றவர்களின் பொருட்களைத் திருடும் பழக்கம் இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 15, 2022, 02:05 PM IST
  • நோயாளிகள் திருடப்பட்ட பொருட்களை வெவ்வேறு வழிகளில் பயன்படுத்துகின்றனர்.
  • விழிப்புணர்வு இல்லாததால் நோயாக கருதப்படுவதில்லை.
  • க்ளெப்டோமேனியா நோயாளிகள் மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
Kleptomania: திருடும் ஆர்வத்தை தூண்டும் கிளெப்டோமேனியா என்னும் உளவியல் நோய்..!! title=

கிளெப்டோமேனியா என்பது ஒரு மனநலக் கோளாறாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றவர்களின் பொருட்களைத் திருடும் பழக்கம் இருக்கும். இதில் பணம் மட்டுமல்ல, தேவையில்லாத பொருட்களையும் கூட திருடுகிறார்கள்.

கிளெப்டோமேனியாவின் பெயரை அனைவரும் கேள்விப்பட்டிருக்க கூடும் என்றாலும், பெரும்பாலான மக்களிடம் இந்த நோயைப் பற்றிய சரியான தகவல்கள் இல்லை. இந்த நோயின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் அதை எவ்வாறு சமாளிப்பது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆர்வத்தை கட்டுப்படுத்த இயலாத நிலை

கிளெப்டோமேனியா என்பது ஆர்வத்தை கட்டுபடுத்த இயலாத நிலையிலான, ஒரு தீவிர உளவியல் பிரச்சனையாகும். இதனால், பாதிக்கப்பட்டவர் பொருட்களை திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நோயில் தெரிந்தே திருடும் நபர், பின்னர் குற்ற உணர்ச்சியில் அவதிப்படும் நிலையும் ஏற்படுகிறது. பெரும்பாலான க்ளெப்டோமேனியா நோயாளிகள் எங்கு திருடுவது என்று எதை திருடுவது என  திட்டமிட்டு செய்வதில்லை. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாததால், பழக்கமான இடங்கள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கூட திருடத் தொடங்குகிறார்கள்.

மேலும் படிக்க | பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

நோயாளிகள் திருடப்பட்ட பொருட்களை வெவ்வேறு வழிகளில் பயன்படுத்துகின்றனர்

இத்தகைய பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தேவையோ பேராசையோ இல்லாமல் சில பொருட்களை ஆர்வம் காரணமாக தூக்கி சென்று விடுவார்கள். சில நேரங்களில் இந்த பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு பணப் பற்றாக்குறை ஏதும் இருக்காது. ஆனால் தங்கள் பேரார்வத்தை கட்டுப்படுத்த முடியாமல், தனது சந்தோஷத்திற்காக மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள். பல நோயாளிகள் இந்த பொருட்களையோ பணத்தையோ பயன்படுத்துவதில்லை. வெகு சிலரே அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் திருடப்பட்ட பொருட்களையும் பணத்தையும் ஏதேனும் ஒரு பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைக்கும் நோயாளிகளும் உள்ளனர்.

விழிப்புணர்வு இல்லாததால் நோயாக  கருதப்படுவதில்லை

இந்தியாவில் மனநலம் குறித்த போதிய விழிப்புணர்வு இன்னும் இல்லை. பெரும்பாலும் க்ளெப்டோமேனியா நோயாளி ஒருவரை மனநோயாளியாக பார்க்கப்படுவதை விட திருடனாகவே பார்க்கப்படுகிறார். சமூகத்தில் பலமுறை அவமானப்படுகிறார்கள். க்ளெப்டோமேனியா ஒரு வகையான நோய் என்பதையும், சரியான ஆலோசனை மற்றும் ஆதரவுடன், சிகிச்சை அளித்து குணப்படுத்த என்பதையும் எப்போதும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

கிளெப்டோமேனியா நோயாளிகள் மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்

மனநலம் தொடர்பாக கடந்த சில வருடங்களில் நிறைய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட பிரச்சனை உள்ள ஒருவரையோ அல்லது நண்பரையோ உங்களுக்குத் தெரிந்தால், அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். தகுந்த சிகிச்சைக்கு பிறகு அவர்களை இந்த நோயிலிருந்து குணப்படுத்த முடியும்.

மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News