கொரோனா சகாப்தம் பல விஷயங்களில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேலையை வீட்டில் இருந்தே செய்யும் பழக்கத்தை வழக்கமாக்கிய கொரோனாக்காலம், உடல் எடையை பராமரிக்க விரும்புபவர்களுக்கு கொடுங்காலமாக இருக்கிறது.
இதனால் உடல்நலப் பிரச்சனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், எடையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு, அதிக உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை குறைக்கும் செய்திகளில் ஆர்வமும் அதிகமாக இருக்கும்.
ஆனால், அவற்றிற்கு எந்த அளவு பயன் இருக்கும் என்று உறுதியாக சொல்லமுடியாது.
ஆனால், மாதம் 12 கிலோ வரை எடையை குறைக்கும் (Weight Loss) ஒரு சாதனம் இருக்கிறது என்றால் உற்சாகம் கரை புரண்டு ஓடாதா? உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு வரப்பிரசாதமாக கிடைத்திருக்கும் இந்த கருவியைப் பற்றிய தகவல்கள் Daily Mail.com ஊடகத்தில் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் மற்றும் நியூசிலாந்தில் உள்ள விஞ்ஞானிகள் எடை இழப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளனர், இது காந்தங்கள் மற்றும் லாக்கிங் போல்ட்களைப் பயன்படுத்தி பற்களை ஒன்றாக இணைக்கிறது. பற்களில் பொருத்திக் கொள்ளும் இந்த சாதனம் உடல் எடையை உறுதியாக குறைக்கிறதாம்.
Also Read | உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளின் பட்டியல் இங்கே
நியூசிலாந்தில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட டெண்டல்ஸ்லிம் உணவுக் கட்டுப்பாடு (DentalSlim Diet Control) கருவி, மேல் மற்றும் கீழ் பற்களுக்கு இடையில் பொருத்தப்படுகிறது.
இந்தக் கருவியை அணிந்த ஒருவர் தனது வாயை சுமார் 2 மி.மீ. அளவுக்குத் தான் திறக்க உதவும். எனவே உணவு உட்கொள்ளும் அளவு குறையும், ஆனால் பேசுவதிலும் சுவாசிப்பதிலும் எந்த பிரச்சனையும் இருக்காது.
ஒரு பல் மருத்துவர்தான் இந்த கருவியை பொருத்துவார். திட உணவுகளை உண்ணாமல் தடுப்பதே சாதனத்தின் நோக்கமாகும். பிரிட்டிஷ் பல் மருத்துவ இதழில் இந்த சாதனத்தின் சோதனை வெளியிடப்பட்டது. இந்த சோதனையில் பங்கேற்றவர்கள் இரண்டு வாரங்களில் சராசரியாக 6.36 கிலோவை இழந்தனர்.
மேலும், உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, இந்த சாதனத்தை தொடர்ந்து தங்கள் பற்களில் வைத்துக் கொள்ளவும் விரும்புகிறார்களாம்!
Read Also | உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR