துளசியில் இருக்கும் மருத்துவ குணங்கள்

துளசியில் இருக்கும் மருத்துவ குணம் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

Written by - Dayana Rosilin | Last Updated : Apr 27, 2022, 01:32 PM IST
  • துளசி செடியில் உள்ள மருத்துவ குணங்கள்
  • நாள்தோறும் பருகி வந்தால் கிடைக்கும் பலன்
  • சளி, இருமல் போன்ற நோய்களுக்கு சிறந்தது
துளசியில் இருக்கும் மருத்துவ குணங்கள் title=

கிராமங்களில் இன்றும் பாட்டி வைத்தியம் என்றால் அதில் முதன்மையாக நிற்பது துளசிசான். இந்த துளசி இலையில் அவ்வளவு மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்த கூடிய சிறப்பை கொண்டது. மேலும், துளசி ஜீரண சக்தியை மேம்படுத்தி பசியை தூண்டி விடுகிறது இதனால் கிராமங்களில் உள்ள அம்மாக்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி துளசிச்சாற்றை பிழிந்து கொடுப்பார்கள். 

அது மட்டும் இன்றி நாள்தோறும் இதை பருகு வருவதால் குடல் புண், வாய் புண் உள்ளிட்டவை வராமல் தடுக்கும். வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தண்ணீரில் துளசியை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் விரைவிலேயே குணமடையும். இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி மிகவும் உருதுணையாக உள்ளது. துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி இருக்கிறது. 

மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் துளசி கட்டாயம் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று. எனவே உங்கள் வீட்டிலும் துளசி செடி இருந்தால், உங்களுக்கு ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம். நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி என்றேல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த துளசி வகைகள் அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | சிவகரந்தை இருக்கும்போது நரைமுடியிருந்தால் கவலை எதற்கு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News