Ice Apple: நுங்கு சாப்பிட்டா பல நோய்கள் ஓடிப்போகும்! ஆனா இப்படித் தான் சாப்பிடனும்

Immunity Boosters: தீராத வியாதியையும் தீர்த்து வைக்கும் நுங்கு! இப்படி பயன்படுத்தினால் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு அருமருந்து..

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 27, 2023, 08:55 AM IST
  • பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவரா?
  • நுங்கு மருத்துவ நன்மைகள்
  • தீராத வியாதியையும் தீர்த்து வைக்கும் நுங்கு
Ice Apple: நுங்கு சாப்பிட்டா பல நோய்கள் ஓடிப்போகும்! ஆனா இப்படித் தான் சாப்பிடனும் title=

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பழங்களில் மிகவும் முக்கியமானது நுங்கும். பவ்லேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

நுங்கு சுவையான பழங்களில் ஒன்று. சுவைக்காக மட்டுமல்ல, அதன் மருத்துவ பண்புகளுக்காகவும் மிகவும் அறியப்படுகிறது. வெண்மையான உள் பகுதியைக் ஒண்ட நுங்கு, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்து, புரதம், வைட்டமின்-ஏ, வைட்டமின்-கே போன்ற சத்துக்களை ஏராளமாக கொண்ட நுங்கு, நீர்ச்சத்து கொண்ட பழம் ஆகும். நுங்கின் தோல்பகுதியில் தான் கால்சியம், பாஸ்பரஸ் , வைட்டமின் பி, சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. 

பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தப்படுத்தும் நுங்கு, வெயில் காலத்தில் விளையும் பழம் என்றாலும், எப்போதுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும்.  இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் மற்ற நன்மைகளை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் 

நீர்ச்சத்து: கோடைக்காலம் முதல் மழைக்காலம் வரை மக்களின் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும் .அத்தகைய சூழ்நிலையில், உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். நீரிழப்பைத் தவிர்க்க, நுங்கை உட்கொள்ளலாம். நுங்கு உண்பதால் உடல் குளிர்ச்சியடையும்.  நீரிழப்பு நீங்க, கண்டிப்பாக இதை சாப்பிடுங்கள்.

மேலும் படிக்க | பேர்ல தான் லெமன்! ஆனா சர்க்கரை வியாதிக்கு எமன்! கர்ப்பூரப்புல் எனப்படும் லெமன்கிராஸ்

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்: உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு மிகவும் பலவீனமாக இருக்கும்போது, ​​​​அதை வலுப்படுத்த, சில ஆற்றல்மிக்க பொருட்கள் தேவைப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நோய்களில் இருந்து விலகி இருக்கவும், நீங்கள் நுங்கு சாப்பிட வேண்டும். இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் பழங்களில் நுங்கு முதலிடத்தைப் பிடிக்கிறது.

எடை இழப்பு: உடல் பருமன் உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க இந்த பழத்தை சாப்பிட வேண்டும். எடை குறைக்கும் உணவில் நுங்குக்கு குறிப்பிட்ட பங்கு உள்ளது. இதை சாப்பிடுவதன் மூலம், வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும், ஏனெனில் இதில் தண்ணீரின் அளவு அதிகமாக இருக்கும். இதனுடன், கலோரிகளும் இதில் மிகக் குறைவு.

சூட்டு கொப்புளங்கள்: உடல் சூட்டைத் தணிக்க நுங்கு உதவும். தினமும் நுங்கை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும். கொப்புளங்களின் மீது நுங்கு நீரை தடவி வருவதன் மூலம் கொப்புளங்கள் குளிர்ச்சியடைந்து அரிப்பை உண்டாக்காமல் இருக்கும்.

​மலச்சிக்கல்: கோடையில் உடலில் அதிகபடியாக வியர்வை வெளியேறுவதால் உடலில் வழக்கத்தை விட அதிகப்படியான நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும். அதை தவிர்க்க பழங்கள், நீர்ச்சத்து மிக்க காய்கறிகளை எடுத்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அதோடு, காரமான உணவு வகை, வயிற்றுபிரச்சனை, செரிமானக்கோளாறினால் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைகள், நுங்குகளை சாப்பிடுவதால் ஓடிப்போகும். குடல் இயக்கத்தை சீராக செயல்பட வைக்க நுங்கு உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவைது. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... கோதுமைக்கு பதிலாக ‘இந்த’ சப்பாத்திகளை டயட்டில் சேருங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News