நம் உடலின் ஆரோக்கியத்தில் காய்கறிகளும் பழங்களும் மிகப்பெரிய பங்களிக்கின்றன. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இவற்றிலிருந்து நமக்கு கிடைக்கின்றன.
சில பழங்கள் ஆண்டு முழுவதும் நமக்கு கிடைத்தாலும், சில பழங்கள் ஆண்டின் சில குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே நமக்கு கிடைக்கின்றன. இந்த பதிவில், நாம் கிவி பழங்களின் நன்மைகளைப் பற்றி பார்க்கவுள்ளோம். கிவி பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் ஒரு பழமாகும். எந்த பருவத்திலும் கிவி பழத்தை சாப்பிடலாம்.
கிவி பழத்தை சாப்பிடுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இதனால் உடலில் நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் வளர்கிறது. கொரோனா போன்ற வைரஸ் தொற்றை தவிர்க்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். ஆகையால், நமது அன்றாட உணவில் கிவி பழத்தை உட்கொள்வது மிக நல்லது. கிவி பழம் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். கிவியின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | Immunity Booster: நோய் எதிர்ப்பு சக்தி உணவு குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன!
கிவி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
- இதய நோய், இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு கிவி மிகவும் நன்மை பயக்கும்.
- கிவி சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
- கிவி சாப்பிடுவதால், சருமம் பளபளப்பாகும், சுருக்கங்கள் நீங்கும்.
- வயிற்றில் ஏற்படும் உஷ்ணம் மற்றும் அல்சர் போன்ற நோய்களை நீக்குவதில் கிவி மிகவும் பயனுள்ள பழமாக கருதப்படுகிறது.
- கிவியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.
- கிவி சாப்பிடுவது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. தினமும் கிவி சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைகிறது.
- மூட்டு வலி, எலும்பு வலியைப் போக்கவும் கிவி உதவுகிறது.
- கிவி மன அழுத்தத்தையும், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று பாதிப்பையும் குணமாக்குகிறது.
கிவியில் உள்ள ஊட்டச்சத்து
கிவியில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. கிவியில் கலோரிகள் மிகக் குறைவாக இருப்பதால், உடற்தகுதியை கவனித்துக்கொள்பவர்கள் கிவியை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வாழைப்பழத்தை விட கிவியில் அதிக பொட்டாசியம் மற்றும் பாதி கலோரிகள் உள்ளன.
கிவியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆரஞ்சு பழத்தை விட இரண்டு மடங்கு வைட்டமின் சி இதில் உள்ளது. கிவியில் நார்ச்சத்து இருப்பதால் செரிமான சக்தியை இது அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட பல நன்மைகள் உள்ள கிவி பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான வாழ்வுக்கு அது உத்தரவாதம் அளிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR