ஆபரேஷன், மருந்துகள் வேண்டாம்: இந்த வீட்டு வைத்தியங்களால் மூலநோயை விரட்டலாம்

Piles Cure: எண்ணெய் உணவுகள், காரமான உணவுகள், மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால், பைல்ஸ் நோய் வரக்கூடிய சாத்துயக்கூறுகள் அதிகமாகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 14, 2022, 07:10 PM IST
  • மூல நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதில்லை என்றாலும் இதற்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது மிக அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள்.
  • பைள்ஸ் நோய்க்கு பல மருத்துவ சிகிச்சைகள் உள்ளன.
  • எனினும், சில வீட்டு வைத்தியங்களும் இந்த வலி மிகுந்த நோயிலிருந்து நிவாரணம் பெற உதவும்.
ஆபரேஷன், மருந்துகள் வேண்டாம்: இந்த வீட்டு வைத்தியங்களால் மூலநோயை விரட்டலாம் title=

பைல்ஸில் இருந்து விடுபடுவது எப்படி: பைல்ஸ் பிரச்சனை தவறான வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. அடிக்கடி எண்ணெய் உணவுகள், காரமான உணவுகள், மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால், இந்த நோய் வரக்கூடிய சாத்துயக்கூறுகள் அதிகமாகின்றன. அதிக நேரம் அமர்ந்து பணிபுரிபவர்களுக்கு இந்த பிரச்சனை வரலாம். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு இந்த நோய் வரக்கூடும். 

பைல்ஸ் முதலில் மலச்சிக்கல் போல் தொடங்குகிறது. போதிய தண்ணீர் அருந்தாதது மற்றும் செரிமானமின்மை ஆகியவை இதன் ஆரம்ப அறிகுறிகளாகும். மலச்சிக்கலுக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது மூலநோயாக மாறும். பைல்ஸ் நோயில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகையில், ஆசனவாய்க்கு வெளியே வலிமிகுந்த மருக்கள் இருந்தாலும் இரத்தம் வராது. இரண்டாவது இரத்தப்போக்கை ஏற்படுத்தும் பைல்ஸ் ஆகும். இதில் மருக்கள் ஆசனவாயின் உள்ளே இருக்கும். இதில் வலியுடன் இரத்தப்போக்கும் இருக்கும்.

மூல நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதில்லை என்றாலும் இதற்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது மிக அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள். பைள்ஸ் நோய்க்கு பல மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. எனினும், சில வீட்டு வைத்தியங்களும் இந்த வலி மிகுந்த நோயிலிருந்து நிவாரணம் பெற உதவும். பைல்ஸ் நோய்க்கான சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க | பைல்ஸ் நோய் வருவதற்கான காரணம் என்ன? நிவாரணம் பெற என்ன செய்வது? 

ஃபைபர் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்

பைல்ஸ் அல்லது மலச்சிக்கலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை குடல் இயக்கத்தை எளிதாக்குவதுடன் இரத்தப்போக்கு மூல நோய் வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது.

கழிப்பறையில் அதிக நேரம் உட்கார வேண்டாம்

கழிப்பறையில் அதிக நேரம் அமர்ந்திருக்காமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். இது நிலைமையை மோசமாக்கலாம். உட்கார்ந்திருக்கும் போது எப்போதும் உங்கள் கால்களை சற்று உயரமான பலகையில் வைத்துக்கொள்ளவும். இது வலியிலிருந்து நிவாரணம் தருகிறது. மேலும் குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.

அதிக தண்ணீர் அருந்தவும்

நீங்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாகவே பைல்ஸ் நோயாளிகள் அதிக நீர் அருந்த அறிவுறுத்தப்படுகிறார்கள். தினமும் ஆறு முதல் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியமாகும்.

உடற்பயிற்சி செய்யவும்

பைல்ஸ் நோய்க்கான மூல காரணம் மலச்சிக்கல் என்கிறார்கள் நிபுணர்கள். பைல்ஸ் நோயாளிகள் தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. வாரத்திற்கு சுமார் 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பைல்ஸ் நோயை கட்டுப்படுத்தணுமா? ஓமத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News