Power of Yoga: மனோரீதியான பாதிப்பை குறைக்கும் யோகா

வலி உணர்வை யோகா போக்குகிறது என்றும்,  நெகிழ்வுத்தன்மை, சீரான இயக்கம், தசை வலிமை, ஒருங்கிணைப்பு என பல்வேறு நலன்களையும் யோகா தருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 20, 2021, 06:58 AM IST
  • மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் அளவைக் குறைக்கிறது யோகா
  • நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது
  • தொடர்ந்து யோகா செய்துவந்தால் கடுமையான மூட்டுவலி குணமாகும்
Power of Yoga: மனோரீதியான பாதிப்பை குறைக்கும் யோகா title=

புதுடெல்லி: யோகக்கலை நம் நாட்டின் பாரம்பரியக் கலை. இது மனதுக்கும் உடலுக்கும் நலம் தரும் வாழ்வியல் கலை. உடல்ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் யோகா மிகவும் நன்மை பயக்கிறது.

கடுமையான மூட்டுவலியை நிர்வகிப்பதில் யோகாவை ஒரு துணை சிகிச்சையாகப் பயன்படுத்தலாம் என ஆல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸில் உடற்கூறியல் துறையின் மூலக்கூறு இனப்பெருக்கம் மற்றும் மரபியல் பேராசிரியர் டாக்டர் ரிமா தாதா கூறுகிறார். 

வாதவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் உமா குமார் மற்றும் அவரது துறையைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

`ஆட்டோ இம்யூனில் யோகா தாக்கம்’ (Yoga impact on autoimmune arthritis) என்ற அவரது அவரது ஆய்வுக் கட்டுரையில், யோகா செய்வது நாள்பட்ட வீக்கத்தை குறைக்கும் என்றும், கீல்வாதத்தை குணப்படுத்தும் என்றும், மனச்சோர்வு, மன அழுத்தத்தின் தீவிரத்தை குறைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

Also Read | International Yoga Day 2021: நாளை சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு

யோகாவை தொடர்ந்து செய்துவந்தால், முடக்கு வாதம் (rheumatoid arthritis) பாதித்த நோயாளிகளுக்கு ஆறுதலைத் தருவதாகவும், மன-நரம்பியல்-நோயெதிர்ப்பு (psycho-neuro-immune axis) என்ற கோணத்தில் நன்மை பயக்கும் என்றும் ஆய்வு கூறுகிறது. வீக்கத்தைக் குறைக்கவும், உடல் மற்றும் உள ரீதியிலான பாதிப்புகளை குறைக்கிறது என்றும் கூறுகிறது. வலி உணர்வு, இயலாமை அளவை குறைப்பதாகவும், உடலின் கூட்டு நெகிழ்வுத்தன்மை, சீரான இயக்கம், தசை வலிமை, ஒருங்கிணைப்பு என பல்வேறு நலன்களையும் யோகா தருவதாக மருத்துவரின் ஆய்வு கூறுகிறது.

"முடக்கு வாதம் என்பது மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவது. இது, நுரையீரல், இதயம், மூளை மற்றும் தோல் ஆகியவற்றை பாதிக்கிறது. யோகாவைப் தொடர்ந்து செய்துவந்தால், கடுமையான மூட்டுவலி நிர்வகிக்கப்படும்.  ஏனெனில் மூட்டு அறிகுறிகளை ஏற்படுத்தும் காரணியான inflammatory cytokine யோகா செய்யும் போது குறைகிறது.

"நோயெதிர்ப்பு ஹோமியோஸ்டாசிஸை ஊக்குவிக்கும் பல்வேறு மரபணுக்களின் வெளிப்பாடு உட்பட பல்வேறு டிரான்ஸ்கிரிப்டுகளும் அதிகரித்து, உதவி செய்யும் மரபணுக்கள் உருவாவதையும் இந்த ஆய்வில் கண்டறிந்தோம். ஆக்ஸிஜனேற்ற மரபணு வெளிப்பாடும் அதிகரித்தது" என்று டாக்டர் தாதா தெரிவித்தார்.

மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் அளவைக் குறைக்கவும் யோகா உதவுகிறது என்பதை இந்த கண்டுபிடிப்பு வலியுறுத்துகிறது, மேலும் நியூரோபிளாஸ்டிசிட்டி (neuroplasticity) அளவை மேம்படுத்துவதற்கு உதவிய பல்வேறு காரணிகளும் அதிகரித்துள்ளன. நோயை மாற்றியமைக்கும் ஆண்டிஹீமாடிக் மருந்துகளை ((Disease-modifying antirheumatic drugs) DMARD கள்) விட அதிக தாக்கத்தை யோகா ஒருவரின் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை இழந்த ஒருவர் தொடர்ந்து யோகா செய்தால், அந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் யோகா தொடர்பான இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

Also Read | 28 ஆண்டுகளாக யோகா மீதான தடை எங்கே? அது சாத்தியமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News