இளநரை பாடாய் படுத்துதா? அப்போ இதிலெல்லாம் கவனம் தேவை

Premature White Hair Problem:  பாடாய் படுத்தும் இளநரை பிரச்சனை உங்களுக்கும் உள்ளதா? இவை காரணமாக இருக்கலாம், ஜாக்கிரதையாக இருங்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 12, 2022, 01:57 PM IST
  • உங்கள் கூந்தலின் நிறம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
  • முடி வெண்மையாவது என்பது வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும் ஒரு உடலியல் நிகழ்வாகும்.
  • இளம் வயதிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணங்கள்.
இளநரை பாடாய் படுத்துதா? அப்போ இதிலெல்லாம் கவனம் தேவை title=

வெள்ளை முடிக்கான காரணங்கள்: 50 வயதிற்குள், உங்கள் கூந்தலில் பாதிக்கு மேல் வெண்மையாக மாறும் வாய்ப்பு உள்ளது. இது இந்த நாட்களில் பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. முடி வெண்மையாவது என்பது வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும் ஒரு உடலியல் நிகழ்வாகும். இருப்பினும் தற்போதைய காலகட்டத்தில் 20 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களும் நரைமுடியால் சிரமப்படுகின்றனர். வெள்ளை முடியால் டென்ஷன் ஏற்படுவதாகவும், டென்ஷனால் முடி இன்னும் அதிகமாக வெள்ளையாக மாறுவதாகவும் கூறப்படுகிறது. இது ஓரளவிற்கு உண்மைதான். 

எனினும், நரைமுடிக்கு பின்னால் இன்னும் பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்களும் முக்கியமான காரணங்களாகும். நரைமுடிக்கான முக்கிய காரணங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

உங்கள் கூந்தலின் நிறம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

உடலில் உள்ள மெலனின் என்ற இயற்கை நிறமி மூலம் முடி அதன் நிறத்தைப் பெறுகிறது. மெலனின் உற்பத்தியானது மெலனோசைட்டுகளால் செய்யப்படுகிறது, அவை தோலின் மேற்பரப்பில் அமைந்துள்ள சிறப்பு நிறமி செல்கள் (ஃபோலிக்கிள்) ஆகும். இவற்றின் மூலம் கூந்தல் வளர்ச்சி ஏற்படுகிறது.

மேலும் படிக்க | அழகை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் பராமரிக்கும் அருமையான வழிகள் 

மனித மயிர்க்கால்களில் இரண்டு வகையான மெலனின்களில் ஒன்று இருக்கலாம். இதில் யூமெலனின் எனப்படும் கருப்பு-பழுப்பு நிறமி உள்ளது. இது முக்கியமாக கருப்பு மற்றும் பழுப்பு நிற கூந்தலில் இருக்கும். பியோமெலனின் எனப்படும் மஞ்சள் அல்லது சிவப்பு நிறமி பிளாண்ட் அதாவது மஞ்சள் நிறத்தில் உள்ள முடியில் இருக்கும். 

இளம் வயதிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணங்கள்:

- மரபணு காரணங்கள்
- வைட்டமின் பி12 குறைபாடு
-ஆபத்தான இரத்த சோகை
- குவாஷியோர்கர் காரணமாக புரத இழப்பு
- இரும்பு மற்றும் தாமிரம் குறைபாடு
- ஹைப்போ தைராய்டிசம்
- மெடிக்கல் ஹேர் ஆயிலின் பயன்பாடு
- ரசாயனம் நிறைந்த பொருட்களை முடிக்கு தடவுதல்
- புக்ஸ் சிண்ட்ரோம்
- டவுன் சிண்ட்ரோம்
- வெர்னர் சிண்ட்ரோம்
- பதற்றம்
- வெள்ளை புள்ளிகள்
- மருந்துகளின் விளைவு

வெள்ளை கூந்தல் பிரச்சனையை தவிர்க்க வேண்டுமானால், மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளில் ஏதேனும் உள்ளதா என யோசித்து, அப்படி இருந்தால், உடனடியாக அதற்கான நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று, தேவையான பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பிளாக் காபி குடித்தால் உடல் எடை குறையுமா? உண்மை என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News