முன்கூட்டிய வெள்ளை முடி பிரச்சனைக்கு தீர்வு: இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே முடி வெள்ளையாக மாற ஆரம்பித்துவிட்டதால், இளைஞர்கள் குறைந்த தன்னம்பிக்கையையும், சங்கடத்தையும் சந்திக்க நேரிடுகிறது. அதேபோல் சந்தையில் கிடைக்கும் பல்வேறு ரசாயனம் நிறைந்த பொருட்கள் மற்றும் தலைமுடி சாயங்களைப் பயன்படுத்துவது நன்மைக்கு பதிலாக நமக்கு தீங்மைகளே விளைவிக்கும். இத்தகைய சூழ்நிலையில், முடிந்த வரை இயற்கையான முறையிலேயே வெள்ளை முடியை கருமையாக்குமாறு சுகாதார நிபுணர்கள் பலர் பரிந்துரைக்கின்றனர்.
இயற்கை வைத்தியம் மூலம் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற முடியுமா?
பொதுவாக இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருமையாக்க வீட்டில் தயாரிக்கப்பட்ட சில பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, அதேபோல் சிலர் கருமையான முடியைப் பெறுவதற்கு இதுபோன்ற சில சமையலறை பொருட்களையும் பயன்படுத்துகிறார்கள், இவை சில சமயங்களில் எவ்வித பலனையும் தருவதில்லை. எனவே இன்று நாங்கள் இது போன்ற சிலரா வீட்டு வைதியங்களை உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம், அவை பின்பற்றுவதன் மூலம் நமக்கு எவ்வித பலனை தாரது. அவை என்ன பொருட்கள் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது
இந்த 3 விஷயங்கள் வெள்ளை முடியை கருப்பாக்க உதவாது, இவை வெறும் வதந்திக்களே
1. வெங்காயம்
வெங்காயம் முடி வலிமை மற்றும் முடி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது, இதில் உள்ள கந்தகம் முடி உதிர்தல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது. பலர் இந்த காய்கறியை வெள்ளை முடிக்கு ஒரு தீர்வாக தவறாக நினைக்கிறார்கள், ஆனால் உண்மை என்னவென்றால், வெங்காயம் முடியை கருமையாக்குவதற்கு பயன் தராது.
2. தயிர்
தயிரில் உள்ள மருத்துவ குணங்களை நாம் அனைவரும் அறிவோம், அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு பொடுகை நீக்க உதவுகிறது. தலை முடி கருப்பாக மாறும் என்ற நம்பிக்கையில் பலர் குளிக்கும்போது தயிரை தலையில் தடவுவார்கள் ஆனால் அப்படி செய்வது எவ்வித பலனையும் தாரது.
3. பூண்டு
பூண்டில் அலிசின் என்ற கந்தக கலவை உள்ளது, இது முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது, ஆனால் பூண்டை பேஸ்ட் வடிவில் தயாரித்து தலையில் தடவினால், முடி கருமையாக மாறாது, நீங்கள் இந்த வழியில் முயற்சி செய்தால், இந்த முறையை இன்றே முயற்சிப்பதை கை விட்டுவிடுங்கள்.
மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ