கொலஸ்ட்ரால் முதல் வெயிட் லாஸ் வரை: முருங்கை அனைத்திலும் பயன் தரும்

Drumstick For Cholesterol: கொலஸ்ட்ராலால் பல வித உடல் உபாதைகள் ஏற்படும் ஆபத்து உள்ளதால், அதிக கொலஸ்ட்ரால் தொடர்ந்து அதிகரிப்பதை தடுப்பது மிக அவசியமாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 14, 2023, 04:53 PM IST
  • கொலஸ்ட்ராலை குறைக்க முருங்கை எப்படி உதவும்?
  • உடல் எடையை குறைக்க முருங்கை பொடியின் நன்மைகள் என்ன?
  • இதை எப்படி பயன்படுத்துவது?
கொலஸ்ட்ரால் முதல் வெயிட் லாஸ் வரை: முருங்கை அனைத்திலும் பயன் தரும் title=

கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கான உணவு: கொலஸ்ட்ரால் அதிகரிப்பு இந்நாட்களில் பலரை பாடாய் படுத்தி வரும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. நரம்புகளில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. கொலஸ்ட்ரால் ஒரு ஒட்டும் பொருளாகும். இது இரத்த நாளங்களில் ஒட்ட ஆரம்பித்து இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இது உடலில் பருமனையும் அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் மாரடைப்புக்கும் வழிவகுக்கும். 

கொலஸ்ட்ராலால் பல வித உடல் உபாதைகள் ஏற்படும் ஆபத்து உள்ளதால், அதிக கொலஸ்ட்ரால் தொடர்ந்து அதிகரிப்பதை தடுப்பது மிக அவசியமாகும். கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பல இயற்கையான வழிகள் உள்ளன. அதில் ஒன்று முருங்கை. கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த முருங்கையை எவ்வாறு பயன்படுத்துவது என இந்த பதிவில் காணலாம். 

கொலஸ்ட்ராலை குறைக்க முருங்கை

முருங்கை இலைகள் பொதுவாக அதிகமாக உண்ணப்படுகிறது. இந்த இலைகளில் அதிக அளவு வைட்டமின் ஏ, பி, சி, ஈ, இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் உள்ளது. இது தவிர, முருங்கைக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், இரத்த தமனிகளின் சுவர்களில் கொலஸ்ட்ரால் சேராமல் இது தடுக்கிறது. இது இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. அதுமட்டுமின்றி, முருங்கை இலைகளை உட்கொள்வதால் உடலுக்கு ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கிடைக்கும்.

முருங்கையை காய்கறியாகச் செய்து உட்கொள்வதைத் தவிர, இன்னும் பல வழிகளிலும் உணவின் ஒரு பகுதியாக்கிக் கொள்ளலாம். மற்றொரு நல்ல வழி முருங்கை டீ செய்து குடிப்பதாகும். முருங்கை தேநீர் தயாரிக்க, உலர்ந்த முருங்கை இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். இது ஆரோக்கியத்தில் அற்புதமான விளைவை ஏற்படுத்தும். மேலும் இது எடை இழப்புக்கும் உதவுகிறது.

மேலும் படிக்க | ’ரண கள்ளி’ பிபி பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்

முருங்கை ஸ்மூத்தி செய்வதும் மிகவும் எளிது. ஸ்மூத்தி செய்ய முருங்கை இலையை அரைக்கவும். அதனுடன் பசலைக் கீரையையும் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் முருங்கை இலையை வேறு ஏதேனும் ஸ்மூத்தியுடன் சேர்த்து அரைத்தும் ஸ்மூத்தி செய்யலாம். இது தவிர முருங்கை இலைகளை சூப்பில் சேர்க்கலாம். மேலும், முருங்கைக்காயை சாலட்டில் ஒரு பகுதியாகவும் சேர்த்து உட்கொள்ளலாம். 

முருங்கைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால், கொலஸ்ட்ராலைக் குறைப்பது மட்டுமின்றி, உடலுக்கு இன்னும் பல நன்மைகளும் கிடைக்கும். முருங்கைக்காய் உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது, அதை சாப்பிடுவதும் சூப் செய்து குடிப்பதும் முழுமையான தூக்கத்தைப் பெறவும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க முருங்கை பொடியின் நன்மைகள்

பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முருங்கை பொடியில் காணப்படுகின்றன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உயிரியல் தாவர கலவைகள், ஐசோதியோசயனேட் மற்றும் நியாசிமினின் கலவைகள் உள்ளன. இதுமட்டுமின்றி கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் முருங்கையில் உள்ளன. உடல் எடையை குறைக்க முருங்கை பொடியின் பயன்பாடு பல மருந்துகளை காட்டிலும் சிறந்ததாக உள்ளது. முருங்கையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை சீராக்க உதவுகிறது. இது தவிர, முருங்கை பொடியை தொடர்ந்து பயன்படுத்துவது உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவும். 

முருங்கை இலைகளின் பொடியில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது. இதை உட்கொள்வது உடலில் உள்ள ஃப்ரீ-ரேடிக்கல்களைக் குறைக்க உதவுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் காரணமாக, உடலில் உள்ள கூடுதல் கலோரிகள் விரைவாக எரிக்கப்படுகின்றன. உடல் எடையை வேகமாக குறைகக் நினைப்பவர்கள் முருங்கை தூள் டீயை தொடர்ந்து உட்கொள்ளலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 7 நாளில் 7 கிலோ எடை இழக்கும் சவாலுக்கு தயாரா... ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News