Rice Kanji Benefits: வடித்த அரிசி கஞ்சியின் அற்புத பலன்கள்

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று இங்கே பார்போம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 25, 2021, 10:06 PM IST
Rice Kanji Benefits: வடித்த அரிசி கஞ்சியின் அற்புத பலன்கள் title=

சாதம் வடித்து சாப்பிடும் முறையை நாம் இன்றைய காலத்தில் மறந்துவிட்டனர். சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் உடலுக்கு நல்லது. வடித்த சாதத்தின் அதிகளவில் நீரில் சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்தவகையில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று இங்கே பார்போம். 

* சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்.

* சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும். அதனால் தான் கோடையில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிக்க சொல்வார்கள் நம் முன்னோர்கள்.

ALSO READ | Fennel Benefits: கண் பார்வை திறனை அதிகரிக்கும் பெருஞ்சீரகம் தண்ணீர்

* வடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

* ஆய்வுகளில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் ஞாபக மறதியைத் தடுக்கும் என்று நிரூபிக்கப்படாவிட்டாலும், ஒருசில செய்திகள் சாதம் வடித்த கஞ்சி தண்ணீருக்கு ஞாபக மறதியைத் தடுக்கும் திறன் உள்ளதாக சொல்கிறது. இதனால் தான் நம் தாத்தா, பாட்டியின் ஞாபக சக்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் உள்ளது

* கால்வலியால் அவதிப்படுபவர்கள் அரிசி கஞ்சி யுடன் வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை முக்கி வைக்கலாம். கால் வீக்கத்தை குறைக்கும் வலி நிவாரணி இது.

* அரிசி கஞ்சியில் வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன. இதனை பயன்படுத்தி ரசம் வைத்து சாப்பிடலாம். காய்கறிகள், பருப்புகளை அதில் வேகவும் வைக்கலாம். இட்லி மாவை அரைக்கும்போது இதனை கொஞ்சம் சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.

ALSO READ | Side Effects of water: இந்த நேரங்களில் நீரை நினைத்துக்கூட பார்க்க வேண்டாம்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News