'Right to Die': சாவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என போராடி வரம் வாங்கிய நவீன பெண்

இறப்பதற்கான உரிமை' குறித்த வரலாற்றுப் போரில் வெற்றி பெற்று ஆச்சரியம் ஏற்படுத்துகிறார் ஒரு பெண்.

Last Updated : Mar 3, 2021, 11:34 PM IST
  • சாவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என சட்டப் போராட்டம் நடத்திய பெண்
  • பெருவில் கருணைக் கொலைக்கு தடை உண்டு
  • சாவதற்கு உரிமை பெற்ற பெரு நாட்டின் முதல் பெண்
'Right to Die': சாவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என போராடி வரம் வாங்கிய நவீன பெண் title=

இறப்பதற்கான உரிமை' குறித்த வரலாற்றுப் போரில் வெற்றி பெற்று ஆச்சரியம் ஏற்படுத்துகிறார் ஒரு பெண்.

அனா எஸ்ட்ராடா (Ana Estrada) என்ற பெரு நாட்டுப் பெண்ணுக்கு இந்த இறக்கும் உரிமை கிடைத்துள்ளது. ரோமானிய கத்தோலிக்க நாடான பெருவில், கருணைக்கொலை சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

படுத்த படுக்கையாக இருக்கும் எஸ்ட்ராடா, எழுந்து நடமுடியாத நிலையில் இருக்கிறார். நோயால் முடங்கி படுக்கையில் இருந்து கஷ்டப்படுவதற்க்கு பதிலாக தான் இறக்க விரும்புவதாக இந்தப் பெண் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.

Also Read | அழிந்துபோன சிறுத்தைகள் மீண்டும் இந்தியாவில் எப்படி வந்தன தெரியுமா?

வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக வந்த நிலையில்,  தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என பெரு நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவு, மகிழ்ச்சியைக் கொடுப்பதாக சம்பந்தப்பட்ட பெண் தெரிவித்தார். 

"இது ஒரு தனிப்பட்ட வழக்காக இருந்தாலும், இது ஒரு முன்னுதாரணமாக செயல்படும் என்று நம்புகிறேன்" என்று 44 வயதான எஸ்ட்ராடா ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

"கண்ணியமான மரணத்திற்கு" உரிமை உண்டு என்று தீர்ப்பளித்த பெரு நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக் கொள்ள அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Also Read | Bharat Biotech: கோவாக்சின் 81% மருத்துவ செயல்திறனைக் காட்டுகிறது   

"இந்த தீர்ப்பு எனக்கு மட்டுமல்ல, என்னை உதாரணமாகக் கொண்டு, பெருவில் சட்டம் மற்றும் நீதியில் ஒரு மாற்றம் வருவதற்கான காரணகர்த்தாவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்" என்று எஸ்ட்ராடா கூறினார்.

உளவியலாளர் (Country) எஸ்ட்ராடா மூன்று தசாப்தங்களாக பாலிமயோசிடிஸ் (polymyositis) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். குணப்படுத்த முடியாத நோயாகக் கருதப்படும் இது படிப்படியாக தசைகளைத் தாக்குகிறது. எஸ்ட்ராடாவுக்கு சுவாசிக்க ஒரு சுவாசக் கருவி தேவைப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, எஸ்ட்ராடா "நேரம் வரும்போது" இறக்கும் உரிமைக்கான தனது சட்டப் போரைத் தொடங்கினார்.

கருணைக்கொலை உலகம் முழுவதும் விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது, பெரு உட்பட பல பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவில், கொலம்பியா மட்டுமே இந்த நடைமுறையை அதுவும் சில நிபந்தனைகளின் கீழ் அனுமதிக்கிறது. 

Also Read | Master Director பகிர்ந்துக் கொண்ட Climax காட்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்

எஸ்ட்ராடாவின் மரணத்திற்கு தேவையான அனைத்து நிபந்தனைகளையும் மாநில சுகாதார காப்பீட்டாளர் எஸ்ஸாலுட் (EsSalud) வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது வாழ்க்கையை நிறைவு செய்ய அந்தப் பெண் முடிவு செய்ததிலிருந்து 10 நாட்களுக்குள் இவை அனைத்தும் நடக்க வேண்டும்.  

இந்த விவகாரம் பற்றி பேசிய எஸ்ஸலுட் (EsSalud) சுகாதார காப்பீட்டு நிறுவனம், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு நெறிமுறையை உருவாக்க மருத்துவ கமிஷன்களை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளது.

இறப்பதற்கு மற்றவர்களுக்கு உதவுவதை உள்ளூர் சட்டம் தடை செய்திருந்தாலும், எஸ்ட்ராடாவுக்கு உதவி செய்த யார் மீதும் எந்தவித குற்றச்சாட்டுகளும் இருக்காது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Also Read | சப்தபதி சடங்குடன் செய்த திருமணம் ‘கலாச்சார அவமதிப்பு?’ குமுறும் நெட்டிசன்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News