அழிந்துபோன சிறுத்தைகள் மீண்டும் இந்தியாவில் எப்படி வந்தன தெரியுமா?

சிறுத்தைகள் 1952 ஆம் ஆண்டில் இந்தியாவில் அழிந்துபோன உயிரினங்களாக அறிவிக்கப்பட்டன. நரேந்திர மோடி அரசு இந்த சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது. அது எப்படி தெரியுமா? சுவராசியமான வழியை தெரிந்துக் கொள்ளுங்கள்…

2021 உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது  ட்விட்டர் கணக்கில் வித்தியாசமான விஷயத்தை பதிவு செய்தார். இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

சிறுத்தைகள் 1952 ஆம் ஆண்டில் இந்தியாவில் அழிந்துபோன இனமாக அறிவிக்கப்பட்டது. கோரியாவின் மகாராஜா ராமானுஜ் பிரதாப் சிங் தியோ (Ramanuj Pratap Singh Deo of Koriya) 1947 ஆம் ஆண்டில் இந்தியாவில் எஞ்சியிருந்த கடைசி மூன்று ஆசிய சிறுத்தைகளை வேட்டையாடி சுட்டுக் கொன்றதாக நம்பப்படுகிறது. இப்போது, 70 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் சிறுத்தைகள் உலா வரும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் எப்படிச் சொல்கிறார்?  

Also Read | சப்தபதி சடங்குடன் செய்த திருமணம் ‘கலாச்சார அவமதிப்பு?’ குமுறும் நெட்டிசன்கள்! 

1 /5

ஆப்பிரிக்காவிற்கும் மத்திய ஈரானுக்கும் சொந்தமான பூனை இனத்தைச் சேர்ந்தது சிறுத்தை. இது நிலத்தில் மிக விரைவாக பாய்ந்து ஓடக்கூடிய பாலூட்டியாகும், சிறுத்தை ஒரு மணி நேரத்திற்கு 60 அல்லது 70 மைல் வேகத்தில் ஓடக்கூடியது. சிறுத்தையின் சிறந்த கண்பார்வை இரையை கண்டறிய உதவுகிறது. சிறுத்தைகளைப் மனிதர்கள் பார்ப்பது கடினம். ஏனென்றால் சமவெளிகளின் உயரமான, உலர்ந்த புற்களுடன் இணைந்து நிற்கும்போது, சிறுத்தையின் சருமத்தில் உள்ள புள்ளிகள் அதை வித்தியாசப்படுத்தி காட்டுவதில்லை.

2 /5

சிறுத்தைகள் அவற்றின் அளவு, வலிமை மற்றும் தாக்கும் திறன் காரணமாக 'பெரிய பூனைகள்' என்று அழைக்கப்படுகின்றன. புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், இவை அனைத்துமே இந்த இனமே.

3 /5

1952 ஆம் ஆண்டில் அழிந்துபோன சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதில் நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த பெரிய பூனை விரைவில் நிதர்சனமாக காணலாம்.  

4 /5

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு நான்கு சாத்தியமான இடங்களைத் தேர்ந்தெடுத்தது அங்கு சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  முன்னதாக 2021 ஜனவரியில், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, இந்தியாவில் சிறுத்தை மீண்டும் அறிமுகப்படுத்த நான்கு சாத்தியமான தளங்களை தேர்ந்தெடுத்தது. அவை, மத்திய பிரதேசத்தில் மூன்று மற்றும் ராஜஸ்தானில் ஒரு இடம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  

5 /5

2020 ஜனவரியில் உயர் நீதிமன்றம் ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியாவில் பொருத்தமான வாழ்விடங்களுக்கு சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்தது.