வெந்தயம் ஆரோக்கியத்தின் களஞ்சியம் தான்... ஆனால் அளவிற்கு மிஞ்சினால் ஆபத்து..!

Fenugreek Side Effects: வெந்தயம் அளவில் சிறியதாக இருந்தாலும் இது நம் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது உடல் நலத்துக்குக் கேடு.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 18, 2024, 06:31 PM IST
  • வெந்தயம் நம் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது.
  • ஆனால் வெந்தயத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது உடல் நலத்துக்குக் கேடு.
  • வெந்தயத்தை அதிகமாக உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் ஏற்படும்.
வெந்தயம் ஆரோக்கியத்தின் களஞ்சியம் தான்... ஆனால் அளவிற்கு மிஞ்சினால் ஆபத்து..! title=

Side Effects of Fenugreek: நமது தமிழ்நாட்டு சமையலில் தவறாமல் இடம்பிடிக்கும் ஒரு பொருள் வெந்தயம். அளவில் சிறியதாக இருந்தாலும் இது நம் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது. அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. எனவே அவை ஆரோக்கியத்தின் சுரங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. வெந்தயத்தில் ஃபோலிக் ஆசிட், ரிபோஃப்ளேவின், காப்பர், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து , மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6, சி மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது, கொலஸ்ட்ரால் அளவை சீராக வைப்பது, தாய்ப்பால் உற்பத்தி, உடல் பருமனை குறைப்பது, செரிமான ஆரோக்கியம் உள்ளிட்ட பல நன்மைகளை வெந்தய விதைகள் வழங்குகின்றன.

ஆனால் இதனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது உடல் நலத்துக்குக் கேடு (Health Tips). எனவே, வெந்தயத்தை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். வெந்தயத்தை அதிகமாக உட்கொள்வதால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நீரிழிவும் வெந்தயமும்

சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள், ஆனால் வெந்தயத்தை அதிகமாக உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கும் ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீரிழிவு நோயாளிகள் அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை சேர்த்து கொள்வது அவர்களது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை மிக ஆபத்தான அளவில் குறைக்க வழிவகுக்கும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் மருத்துவரிடம் வெந்தயம் சாப்பிடலாமா, எவ்வளவு சாப்பிட வேண்டும் போன்ற விஷயங்களை கலந்தாலோசித்த பிறகு வெந்தயத்தை எடுத்து கொள்வது நல்லது..

இதய நோயும் வெந்தயமும்

வெந்தயம் உடலில் பொட்டாசியம் அளவை இயற்கையாகவே குறைக்கும் தன்மையை கொண்டிருக்கின்றன. உடலில் அதிகமாக காணப்படும் பொட்டாசியம் அளவை குறைக்க மருந்துகளை உட்கொள்பவர்கள் அல்லது இதய நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்கள் டயட்டில் அதிக அளவு வெந்தயம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அதிலும் குறைந்த ரத்த அழுத்தம் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வெந்தயம் எடுத்து கொள்ள கூடாது என்கிறார்கள் நிபுணர்கள்.

மேலும் படிக்க | இந்த பழங்களை தோலுடன் சாப்பிட்டால் நீரிழிவு நோயில் நிவாரணம் கிடைக்கும்

கர்ப்பிணிப் பெண்கள் அதிக வெந்தயம் சாப்பிடக் கூடாது

 கர்ப்பிணிப் பெண்களும் வெந்தயத்தை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இதன் அதிகப்படியான நுகர்வு இரத்தப்போக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். மேலும், தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும் வெந்தயத்தை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெந்தயத்தை அதிகமாக உட்கொள்வது குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

வயிறு தொடர்பான பிரச்சனைகள்:

 வெந்தயத்தை அதிக அளவு உட்கொள்வதால், வாயு மற்றும் அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, நீங்கள் அதை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

ஒவ்வாமையை ஏற்படுத்தும் வெந்தயம்: 

உங்களுக்கு தோல் ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், தவறுதலாக கூட வெந்தயத்தை அதிக அளவில் உட்கொள்ள வேண்டாம். வெந்தயத்தை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஒவ்வாமையை ஏற்படுத்தும், தோல் எரிச்சல் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்தும். வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு குமட்டல், தலைவலி, மூக்கடைப்பு, முகம் வீங்குவது, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும்.

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது. 

மேலும் படிக்க | இறைச்சி, மீனை விட அதிக ஆற்றலை கொடுக்கும் டாப் ‘5’ சைவ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News