அசைவம் சாப்பிட்டால் கேன்சர் வருமா?

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொண்டு, எந்த உணவை சாப்பிட்டாலும், அளவுடன் நிறுத்திக் கொண்டால் ஆபத்துகள் இல்லை.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 11:43 AM IST
அசைவம் சாப்பிட்டால் கேன்சர் வருமா?  title=

ஒருவருக்கு சைவ உணவு வேண்டுமா அல்லது அசைவ உணவு வேண்டுமா என்பது பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் விவாதம். உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. ஆனால், அசைவ உணவை அதிகம் எடுத்துக்கொள்வதால் உடலுக்கு ஏற்படும் தீமைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். 

1. செரிமான பிரச்சனை 

அசைவ உணவுகளை உட்கொள்வதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். இதில் உள்ள புரதச்சத்து உடலுக்குத் தேவையானதை விட அதிகமாக உள்ளது. அசைவ உணவில் அதிக அளவு இருக்கும் புரதம், செரிமானத்தை கடினமாக்குகிறது. மேலும், அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கலையும் எதிர்கொள்ள நேரிடும்.

2. நுரையீரல் பாதிப்பு

சிவப்பு இறைச்சியில் உள்ள கொழுப்புகள் தமனிகளில் குவிந்து, இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும். இது நாள்பட்ட நுரையீரல் நோய் (சிஓபிடி), உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அடித்தளமிடுகின்றன. இதய அடைப்பு மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற சிக்கல்களையும் எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

ALSO READ | வலுவான நுரையீரலுக்கு இந்த 5 பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

3. ஆண்டிபயாடிக் எதிர்ப்பு

பண்ணைகளில் கால்நடைகளை வளர்க்கும் முறை சுகாதாரமற்றது. இந்த பண்ணை விலங்குகளின் வழக்கமான பராமரிப்பின் போது செயற்கை நுண்ணுயிர் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செலுத்தப்பட்ட கோழிகளின் இறைச்சியை சாப்பிடும்போது, நம் உடலிலும் நுழையக்கூடும். இது நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

4. புற்றுநோய்

அதிக அளவு சிவப்பு இறைச்சியை உட்கொள்வதால் புரோஸ்டேட், மார்பகம், சிறுநீரகம் மற்றும் செரிமானப் பாதை உள்ளிட்ட இடங்களில் பல வகையான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, பெருங்குடல் புற்றுநோய், சிவப்பு இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், கோழி இறைச்சி பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைப்பதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

5. இதய நோய்கள்

பல்வேறு ஆய்வுகளில், இறைச்சிக்கும், இதய நோய்க்குமான தொடர்பை விவரிக்கின்றன. அந்த ஆய்வுகளின்படி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி பொருட்களை உட்கொள்வது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாக தெரிவிக்கின்றன. இறைச்சியை அடிக்கடி உட்கொள்ளும்போது, இதயநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ALSO READ | கொத்தமல்லி இலையில இவ்ளோ சத்து உள்ளதா!

6. டைப் 2 நீரிழிவு நோய்

ஒருவர் நாள்தோறும் அதிக அளவு சிவப்பு இறைச்சியை உட்கொள்ளும் போது, ​​டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து 30% அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேநேரத்தில், உணவுகளைப் பொறுத்தவரை, சரிவிகிதம் என்ற ஒன்றை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொண்டு, எந்த உணவை சாப்பிட்டாலும், அளவுடன் நிறுத்திக் கொண்டால் ஆபத்துகள் இல்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News