Dengue காய்ச்சல் அறிகுறியா? சுலபமான வீட்டு வைத்தியக் குறிப்புகள்

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், அவற்றை குணப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் மற்றும் யோகா ஆசனங்களைப் பின்பற்றவும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 28, 2021, 12:27 PM IST
  • நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும்
  • யோகாசனங்களை செய்யவும்
  • உணவில் ஏலக்காய், மிளகு சேர்க்கவும்
Dengue காய்ச்சல் அறிகுறியா? சுலபமான வீட்டு வைத்தியக் குறிப்புகள் title=

வைரஸால் பாதிக்கப்பட்ட இருபது பேரில் ஒருவரை கடுமையான டெங்கு காய்ச்சல் பாதிக்கிறது. தசையில் அசௌகரியம், எலும்பு வலி, மூட்டு வலி, நமைச்சல், காய்ச்சல், தலைவலி, வாந்தி, குமட்டல் ஆகியவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும். டெங்கு காய்ச்சலுக்கு யோகா மற்றும் வீட்டு வைத்தியம் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

இந்த ஆண்டு டெங்கு நோய்த்தொற்று மிகவும் அதிகமாக உள்ளது, பலர் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அளவு மோசமாக பாதிக்கப்பட்டனர்.

டெங்கு காய்ச்சல் மிகவும் பரவலாக இருந்தாலும், பொதுவாக சிறிய அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்துகிறது; ஆயினும்கூட, கடுமையான டெங்கு அதிக ஆபத்துள்ள ஒருவரைத் தாக்கக்கூடும். டெங்கு தொற்று என்பது, ரத்தக்கசிவு, காய்ச்சல் என அதிகமாகலாம். 

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் டெங்கு காய்ச்சல் (dengue fever) உயிருக்கு ஆபத்தானது. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளில் மூட்டு வலி, நமைச்சல், காய்ச்சல், தலைவலி, வாந்தி, குமட்டல் என பல பிரச்சனைகள் அடங்கும். 

டெங்கு காய்ச்சல் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துவதால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கலாம், இதன் விளைவாக, குணமடைந்த பிறகு ஒரு நபர் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

ALSO READ | சிறுநீரகக்கல், ரத்த சோகையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இந்தப் பழம் சாப்பிடுங்கள்

எனவே, டெங்கு காய்ச்சலைத் தடுக்க இந்த உதவிக்குறிப்புகளைப் (Health Tips) பின்பற்றவும். உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள். எண்ணெய் அல்லது காரமான எதையும் சாப்பிட வேண்டாம். கருப்பு மிளகு மற்றும் ஏலக்காய் போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். புதிதாக சமைத்த உணவுகளை மட்டுமே உட்கொள்ளுங்கள். 

சிட்ரஸ் உணவுகள், பூண்டு, பாதாம், மஞ்சள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை (Food for health) சாப்பிடுங்கள்.

யோகா நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது 
ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு உங்களுக்கு டெங்குவைத் தடுக்க உதவுகிறது, யோகா போன்ற முழுமையான பயிற்சிகள் நோயெதிர்ப்பை அதிகரிக்கும். எனவே,  உங்களுக்கு டெங்கு இருந்தால், டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைய யோகா உதவும். வலுவான நோய் எதிர்ப்பு சக்தி டெங்குவின் ஆரம்ப அறிகுறிகளையும் குணப்படுத்தும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும். 

எனவே, டெங்கு காய்ச்சலை தடுக்க யோகாசனங்களை செய்யலாம். குறிப்பாக, வஜ்ராசனம், தனுராசனம் போன்றவை பலனிப்பதாக இருக்கும். ஆசனங்களை மெதுவாக பயிற்சி செய்யுங்கள். நீண்ட நேரம் செய்ய வேண்டாம். பிராணயாமா என்னும் மூச்சுப் பயிற்சிகளையும் செய்யலாம்.

ALSO READ | பெங்களூரு வந்த 2 தென்னாபிரிக்க பயணிகளுக்கு கொரோனா! ஒமிக்ரானா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News