‘மனமே நலமா?’ மன அழுத்தத்திலிருந்து வெளிவர இந்த வழிமுறைகளை கடைபிடியுங்கள்

மன அழுத்தத்தை நீக்க இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

Written by - Yuvashree | Last Updated : May 3, 2023, 04:40 PM IST
  • மன அழுத்தத்தை நீக்க எளிய வழிமுறைகள்.
  • ஆரோக்கிய செல்பாடுகளில் ஈடுபடுவதனால் ஏற்படும் நன்மைகள்.
  • உடல் நலன் மற்றும் மன நலன் மீது அக்கறை கொள்ளுங்கள்.
‘மனமே நலமா?’ மன அழுத்தத்திலிருந்து வெளிவர இந்த வழிமுறைகளை கடைபிடியுங்கள் title=

நமது வாழ்க்கையில் ஏற்படும் சில திகைப்பிற்குரிய மாற்றங்களாலும் வேறு சில காரணங்களாலும் மன அழுத்தம் ஏற்படும். அப்படி நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை நீக்குவதற்கு நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாம் வாழ்வில் ஏதாவதொறு விஷயத்தை இழந்திருந்தாலோ, மிகவும் ஆசைப்பட்ட ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்றாலோ மன அழுத்தம் உண்டாகலாம். இவ்வளவு ஏன்..காரணமே இல்லாமல் கூட மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிமுறையும் நம்மிடத்தில்தான் இருக்கிறது. பின்வருபவற்றை கடைப்பிடித்தால், மன அழுத்தாத்தால் பாதிக்கப்பட்டிருப்போர் மெல்ல மெல்ல குணமடைய வாய்ப்பு இருக்கிறது. 

 

உடலுக்கு வேலை கொடுங்கள்:

 

மன அழுத்தத்தில் இருப்போருக்கு உடலுக்கு வேலை கொடுக்க தோன்றாது. ஆனால், நாம் அந்த தவறைத்தான் செய்யக்கூடாது. ஒரு ஆய்வில், மன அழுத்தத்திலிருந்து மீள்வதற்கு ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி உதவும் என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டோர் தங்களது மன அழுத்தங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டதாக தெரிவித்துள்ளனர். அதனால், உங்களுக்கு எப்போதெல்லாம் மன அழுத்தத்தின் உடல் வேலை செய்ய வேண்டாம் என தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் வீட்டிற்குள்ளேயே நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். அல்லது படியேறி இறங்குங்கள். இது கண்டிப்பாக உங்களை நீங்களே சரி செய்துகொள்ள உதவும். 

 

மேலும் படிக்க | நரை முடி கருமையாக வளர இதை மட்டும் செய்தால் போதும், உடனே ட்ரை பண்ணுங்க

 

உணவு கட்டுப்பாட்டை கொண்டு வாருங்கள்:

 

உணவு கட்டுப்பாடு (டயட்) உடல் நலத்திற்கு மட்டுமல்ல, மனநலத்திற்கும் நல்லதுதான் என சில மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தங்களது துயரங்களை போக்க அதிகமாக சாப்பிடுவர் (stress eat). இப்படி செய்வது பின்னாளில் பெரிய பிரச்சனைகளில் கொண்டு போய் விடும். ஆகவே, உங்களது உடலுக்கு ஏற்ற டயட்டை கடைப்பிடித்து உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணுங்கள். 

 

ஆரோக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்:

 

மன அழுத்தத்தில் இருக்கும் போது சமூக வலைதளங்களை ஸ்க்ரோல் செய்கையில் உங்கள் நிலைக்கு ஏற்றவாறு சில போஸ்டுகள் கண்ணில் தென்படும். அதைப்பார்ப்பதால் இன்னும் இன்னும் உங்களுக்கு மனக்கவலைதான் அதிகமாகும். இதை தவிர்க்க ஆரோக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். நீங்கள் தொலைத்த ஹாபியை தேடுங்கள். கேட்க மறந்த பாடல்களை கேளுங்கள். செல்லப்பிராணி அல்லது குழந்தைகள் வீட்டில் இருந்தால் அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். 

 

உங்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்:

 

உங்களை நீங்கள் அதிகம் விரும்ப ஆரம்பித்தால், உங்களுக்குள் இருக்கும் பல பிரச்சனைகள் தீர்ந்து விடும் என பல மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி, உங்கள் மீது அக்கறை செலுத்திக்கொள்ள சில செல்ஃப் கேர் செயல்பாடுகளை பார்க்கலாமா? 

 

  • சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது உங்கள் மனசோர்வை போக்க உதவும். 

  • ஒரு நாள் உங்களுக்கு மோசமான நாளாக அமைந்தால் அன்று வேறு எந்த வேலையிலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாமல் வீட்டிற்கு போய் உறங்கலாம். 

  • நீண்ட நாளாக படிக்க நினைத்த புத்தகத்தை படிக்கலாம் அல்லது உங்களுக்கு பிடித்த படத்தை மீண்டும் பார்க்கலாம். 

  • இலகுவான யாேகாசனங்களை மேற்கொள்வது.

 

மருத்துவரின் உதவியை நாடுங்கள்:

 

மேற்கூறிய எல்லா விஷயங்களையும் செய்தாலும் உங்களுக்கு எதுவும் சரியாகாததுபோல தோன்றினால் மனநல நிபுணரையோ அல்லது மனநல மருத்துவரையோ பார்ப்பது ஆகச்சிறந்தது. இப்படி மன அழுத்தத்தினால் சிரமப்படுவோருக்கு உதவுவதற்காகவே பல மருத்துவர்கள் இருக்கின்றனர். அவர்களிடம் சென்றால், இதனால் பாதிக்கப்படுவோருக்கான தக்க வழிமுறைகளை கூறுவர். மன அழுத்தம் என்பது தீர்க்க முடியாத நோய் பாதிப்பு இல்லை..அது சக மனிதனின் ஒரு நிலை. அதிலிருந்து மீள முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக தங்களது பயணத்தில் வெற்றியடைவர். 

 

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? அதற்கு கண்டிப்பாக இந்த டயட்டை கடைபிடியுங்கள்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News