சிறுநீர் தொற்று முதல் பல் வலி வரை.. வியக்க வைக்கும் படிகாரத்தின் மருத்துவ குணங்கள்!

சித்தர்கள் பயன்படுத்திய ஒரு வகை மருத்துவ குணம் மிக்க உப்பு படிமம் தான் படிகாரம் என்படும் படிகாரக் கல். இந்தப் படிகாரம் என்பது அலுமினியத்தின் நீர்ரேற்றிய இரட்டை சல்பைட் உப்பு ஆகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 30, 2023, 11:10 PM IST
  • வீட்டு வைத்தியத்தில் படிகாரம் பல பிரச்சனைகளுக்கு தீர்வைத் தருகிறது.
  • பழங்காலத்திலிருந்தே படிகாரம் பயன்படுத்தப்படுகிறது.
  • படிகாரம் பல வகையான வலிகளை நீக்கும் தைலமாக வேலை செய்கிறது.
சிறுநீர் தொற்று முதல் பல் வலி வரை.. வியக்க வைக்கும் படிகாரத்தின் மருத்துவ குணங்கள்! title=

படிகாரமும் வீட்டு வைத்தியமும்: நமது நாட்டின் பண்டைய மருத்துவ முறைகளை ஏற்படுத்திய சித்தர்கள் பயன்படுத்திய ஒரு வகை மருத்துவ குணம் மிக்க உப்பு படிமம் தான் படிகாரம் என்படும் படிகாரக் கல். இந்தப் படிகாரம் என்பது அலுமினியத்தின் நீர்ரேற்றிய இரட்டை சல்பைட் உப்பு ஆகும். இந்த படிகாரக்கல், நமது சித்த மருத்துவக் குறிப்புகளில் சீனாக்காரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.வீட்டு வைத்தியத்தில் படிகாரம் பல பிரச்சனைகளுக்கு தீர்வைத் தருகிறது. பழங்காலத்திலிருந்தே படிகாரம் பயன்படுத்தப்படுகிறது. ​​​​அந்தக் காலத்திலும் படிகாரம் பல வகையான வலிகளை நீக்கும் தைலமாக வேலை செய்தது. படிகாரத்தில் பல நன்மைகள் உள்ளன. பல நோய்களுக்கு உடனடி நிவாரணம் தரும் படிகாரத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

வியர்வை துர்நாற்றம் நீங்க

சிலருக்கு உடம்பில் அதிகளவு வியர்வை துர்நாற்றம் வரும். அவர்கள் தினமும் குளித்து முடித்தவுடன் படிகாரம் கற்களை உடம்பில் தேய்த்து குளித்து வர உடலில் ஏற்படும் கெட்ட வியர்வை துர்நாற்றம் நீங்கி விடும்.

கண்களின் கருவளையம் நீங்க

கண்களுக்குக் கீழே கருவளையம் உள்ளவர்கள், சிறிது படிகாரப் பொடியை நீர் விட்டு நன்கு குழைத்து கண்களுக்குள்ளாக படாமல், கண்களுக்கு கீழே இறக்கும் கருவளையங்கள் மீது தடவி வருவதால் விரைவிலேயே கருவளையங்கள் நீங்கி, கண்கள் கீழிருக்கும் கருமை நிறம் மாறும்.

சிறுநீர் தொற்று

படிகாரம் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. சிறுநீர் தொற்றில் இருந்து விடுபட, அந்தரங்கப் பகுதியை படிகாரம் கலந்த நீரில் கழுவலாம்.

குதிகால் வெடிப்பு நீங்க

சிலருக்கு கால்களில் அதிகளவு குதிகால் வெடிப்பு ஏற்படும். அவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு முன் படிகாரம் கற்களை எடுத்து குதிகால் வெடிப்பு உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து வர ஒரு சில நாட்களிலேயே கால்களில் உள்ள வெடிப்புகள் மறைந்து விடும்.

மேலும் படிக்க | குழந்தையின் மூளை கம்ப்யூட்டரை போல் இயங்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

நக சுத்தி

நக சுத்தி என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவது. இதற்கு, படிகாரத்தை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்றாக அரைத்துக் கொண்டு, அதனை நகச்சுற்று உள்ள நகங்களில் பூச வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர நகச்சுற்று சரியாகிவிடும்.

பல்வலியை போக்கும்

படிகாரம் பற்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது இயற்கையான வாய் பிரெஷ்ஷனராக செயல்படுகிறது. தண்ணீரில் படிகாரம் கலந்து வாய் கொப்பளிக்க பல்வலி நிவாரணம் கிடைக்கும். படிகாரம் வாய் துர்நாற்றத்தையும் நீக்குகிறது.

காயங்களுக்கு களிம்பு

படிகாரம் தடவினால் இரத்தப்போக்கு நிற்கும். காயம்பட்ட இடத்தை படிகாரம் கலந்த தண்ணீரில் கழுவினால், இரத்தப்போக்கு நின்றுவிடும். படிகாரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது காயத்தின் மீது தொற்று ஏற்படும் அபாயத்தை நீக்குகிறது.

இருமல் நிவாரணம்

படிகாரம் இருமல் பிரச்சனையை நீக்குகிறது. படிகாரம் கலந்த நீரில் வாய் கொப்பளிக்க தொண்டை புண் குணமாகும். படிகாரப் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டால், சிறிது நேரத்தில் இருமல் நிவாரணம் கிடைக்கும்.

மேலும் படிக்க | மூளையை பலவீனமாக்கும் விட்டமின் B12 குறைபாடு! தவிர்க்க சாப்பிட வேண்டியவை!

சரும பராமரிப்பு

படிகாரம் பல சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். படிகாரம் முகத்திற்கு இயற்கையான கிளென்சிங் பொருளாக செயல்படுகிறது. படிகார நீரில் முகத்தை மசாஜ் செய்வதன் மூலம் முகத்தை சுத்தம் செய்யலாம். இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறையும்.

தலையில் உள்ள பொடுகுகள் நீங்க

சிலருக்கு தலையில் பேன் தொல்லை பொடுகு தொல்லை போன்றவை ஏற்படுகின்றன. படிகார நீரில் கழுவினால் முடியில் சேரும் தூசி மற்றும் அழுக்கு வெளியேறுவதோடு, அது பேன்களையும் கொல்லும். மேலும் பொடுகுகளையும் அகற்றும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News