குழந்தையின் மூளை கம்ப்யூட்டரை போல் இயங்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

இன்றைய போட்டி மிக்க உலகில் குழந்தைகள் வாழ்க்கையில் சாதிக்க, மிக சுறுசுறுப்பான மூளை  தேவைப்படுகிறது. ஒரு குழந்தையை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க, மிக முக்கியமானது அவர்களின் உணவு. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 10, 2023, 07:34 PM IST
  • எல்லோரும் தங்கள் குழந்தை எல்லாவற்றிலும் சிறப்பாக விளங்க வேண்டும் என ஆசைப்படுவது இயற்கை.
  • குழந்தைகள் மூளை கணிணி வேகத்தில் இயங்க, மூளைக்கு முழு ஊட்டச்சத்து தரும் உணவை கொடுக்க வேண்டும்.
  • மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க, ஆரோக்கியமான உணவு மிக முக்கியமானது.
குழந்தையின் மூளை கம்ப்யூட்டரை போல் இயங்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்! title=

 இன்றைய போட்டி மிக்க உலகில் குழந்தைகள் வாழ்க்கையில் சாதிக்க,  மிக சுறுசுறுப்பான மூளையும், ஆரோக்கியமான மனமும் தேவைப்படுகிறது என்றால் மிகையாகாது. ஒரு குழந்தையை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க, மிக முக்கியமானது அவர்களின் உணவு.  எல்லோரும் தங்கள் குழந்தை எல்லாவற்றிலும் சிறப்பாக விளங்க வேண்டும் என ஆசைப்படுவது இயற்கை. படிப்பு அல்லது விளையாட்டு எதுவானாலும், சரி,  குழந்தைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க, ஆரோக்கியமான உணவு மிக முக்கியமானது.

உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில், உங்கள் குழந்தைகள் மூளை கணிணி வேகத்தில் இயங்க, அவர்களின் மூளைக்கு முழு ஊட்டச்சத்து தரும் உணவை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிறார். மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் சத்துக்களை கொண்ட குறிப்பிட்ட சில உணவுகள்  குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.

தயிர்

பாலை விட குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தயிர் அதிகம் பங்களிக்கிறது. குழந்தைகளுக்கு தயிர் உணவை தவறாமல் கொடுக்கும் போது, மூளை செல்கள் வழங்கும் சிக்னல்களை விரைவாக புரிந்து கொண்டு வினைபுரியும் மூளையின் திறனும் அதிகரிக்கிறது. அதனால் தான் வட நாட்டில் பரீட்சைக்கும் போகும் குழந்தைகளுக்கு தயிரும் சர்க்கரையும் இணைந்த லஸ்ஸி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மீன்

குழந்தைகளின் மூளையை கூர்மைப்படுத்த மீன் உணவு  முக்கிய பங்கு வகிக்கிறது. சால்மன், டுனா மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, ஒமேகா -3 மூளையில் புதிய திசுக்களை உருவாக்க உதவுகின்றன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் பல நன்மைகள் உள்ளன. இது குழந்தையின் மூளை செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.

மேலும் படிக்க | நீரிழிவு முதல் ஆஸ்டியோபோரோசிஸ் வரை... பச்சை வெங்காயம் செய்யும் மாயங்கள்!

முட்டை

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் முட்டைகள் மிக அவசியம். இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், லுடீன், கோலின் மற்றும் துத்தநாகம் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் குழந்தைகளின் மனதை ஒருமுகப்படுத்துவதோடு, நினைவு திறனையும் மேம்படுத்துகின்றன. அசிடைல்கொலின் அல்லது மெமரி ஸ்டெம் செல்களை உருவாக்க கோலிக் உதவுகிறது. இந்த வகையில் முட்டைகளை சாப்பிடுவது குழந்தைகளின் நினைவுத் திறனை மேம்படுத்துகிறது.

முழு தானியங்கள்

முழு தானியங்கள் குழந்தைகளின் மூளைக்கு சிறந்த நீடித்த ஆற்றலைக் கொடுக்கும். இது இரத்த நாளங்களில் உள்ள குளுக்கோஸை அவ்வப்போது மெதுவாக வெளியிடுகிறது, இதனால் குழந்தைகள் நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருப்பார்கள். மூளையின் சரியான செயல்பாட்டிற்கு தேவையான ஃபோலிக் அமிலமும் இதில் உள்ளது

 பச்சை  காய்கறிகள்

கூர்மையான மூளையை பெற கீரை, ப்ரோக்கோலி மற்றும் பிற பச்சை காய்கறிகள் உதவியாக இருக்கும். தக்காளி போன்ற வேறு சில காய்கறிகளும் இன்னும் சிறப்பானவை, அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரி, வாழைப்பழங்கள் மற்றும் கருப்பட்டி ஆகியவை கூட ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகம் கொண்டுள்ள உணவுகள் ஆகும், இது மூளையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.  

ஓட்ஸ்

வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை ஓட்ளில் ஏராளமாகக் காணப்படுகிறது. ஓட்ஸ் உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குழந்தையின் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. குழந்தைகளுக்கு காலை உணவுக்கு ஓட்ஸ் உணவளிப்பது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க |  தைராய்டு பிரச்சனைக்கு தீர்வைத் தரும் ‘சூப்’... தயாரிக்கும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News