அதிமதுரம் கஷாயம்: கொரோனாவிலிருந்து உங்களை காக்கும், பிற ஆரோக்கிய நன்மைகளும் ஏராளம்

ஆயுர்வேதத்தில்,அதிமதுரம் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கால்சியம், ஆண்டியாக்சிடெண்டுகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் புரதங்கள் நிறைந்த அதிமதுரம் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 28, 2021, 06:16 PM IST
  • அதிமதுரம் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்குகிறது.
  • அதிமதுரம் கஷாயம் கொரோனா வைரஸைத் தவிர்க்க உதவுகிறது.
  • அதிமதுரத்தில் ஆண்டியாக்சிடெண்டுகள் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன.
அதிமதுரம் கஷாயம்: கொரோனாவிலிருந்து உங்களை காக்கும், பிற ஆரோக்கிய நன்மைகளும் ஏராளம் title=

புதுடெல்லி: கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், ஏராளமான மக்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளையும், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களையும் (வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ்) தினமும் உட்கொண்டு வருகின்றனர். மேலும் மஞ்சள் கலந்த பால், துளசி கஷாயம் போன்ற ஆயுர்வேத வைத்தியங்களும் பின்பற்றப்படுகின்றன. 

இந்த பதிவில், இயற்கை மூலிகையான அதிமதுரம் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வித கஷாயத்தைப் பற்றி கூறுகிறோம். இது உங்களது நோயெதிர்ப்பு சக்தியை (Immunity) வலிமையாக்குவதோடு உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை அளிக்கின்றது. 

ஆயுர்வேதத்தில்,அதிமதுரம் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

கால்சியம், ஆண்டியாக்சிடெண்டுகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் புரதங்கள் நிறைந்த அதிமதுரம் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாகும். அதிமதுரம் நம் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒவ்வொரு நாளும் வெறும் வயிற்றில் அதிமதுரம் கொண்டு செய்யும் கஷாயத்தைக் குடிக்கத் துவங்கினால், அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனளிக்கும்.

அதிமதுரம் கொண்டு கஷாயம் தயாரிப்பது எப்படி? 

ஒரு கிளாஸ் தண்ணீரில் 6-7 கருப்பு மிளகை அரைத்து அல்லது பொடி செய்து போடவும். அதில் ஒரு துண்டு அதிமதுரத்தைப் போடவும். அதனுடன் துளசியின் (Tulsi) 7-8 இலைகளை சேர்க்கவும். இதற்குப் பிறகு, ஒரு துண்டு இஞ்சியை எடுத்து அரைத்து தண்ணீரில் சேர்த்து குறைந்த சூட்டில் கொதிக்க விடவும். இது கொதித்து பாதியாக குறைந்தவுடன், ​​அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு அல்லது மூன்று கொதி வரவிடுங்கள். இதற்குப் பிறகு, இதை வடிகட்டி, ஆர வைத்து சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கவும். இந்த அதிமதுரத்தின் கஷாயத்தை காலையில் குடிப்பதால் அதிக நன்மைகள் ஏற்படும். 

ALSO READ: உடல் எடையை குறைக்க பீனட் பட்டர் உதவுமா? அதன் ஆரோகிய நன்மைகள்!

அதிமதுரம் கஷாயம் குடிப்பதன் நன்மைகள்

- அதிமதுரம் கஷாயம் கொரோனா வைரஸைத் (Coronavirus) தவிர்க்க உதவுவது மட்டுமல்லாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மீட்பு செயல்முறையை விரைவுபடுத்தவும் உதவுகிறது (மீளும் வேகத்தை அதிகரிக்கிறது).

-அதிமதுரத்தில் ஆண்டியாக்சிடெண்டுகள் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன. அவை கீழ்வாதத்தால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும். கீழ்வாதம் நோயாளிகளுக்கு, அதிமதுரம் கஷாயம் கொடுப்பது நன்மை பயக்கும்.

- தொண்டையில் இருமல் இருந்தாலும் அதிமதுரம் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. யாருக்காவது கபத்தால் பிரச்சனை ஏற்பட்டால், அதிமதுரத்தை கஷாயமாக வைத்துக் கொடுக்கலாம். இதனால் உடனடி பலன் கிடைக்கும். 

(குறிப்பு: எந்தவொரு தீர்வையும் எடுப்பதற்கு முன்பு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது மருத்துவரை அணுகவும். இந்த தகவலுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.)

ALSO READ: கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News