வெயிட் லாஸ், நீரிழிவு மற்றும் மூட்டுவலிக்கு இந்த பொடிதான் ஒரே தீர்வு

நாள்பட்ட மற்றும் தீவிரமான நோய்களுக்கு இயற்கையான முறையில் சிகிச்சை அளிக்க உதவும் சில விஷயங்கள் நம் பாட்டியின் சமையல் குறிப்புகளில் உள்ளன. அதில் முருங்கையும் ஒன்று. இதன் காய்கள், இலைகள், வேர்கள் மற்றும் பூக்கள் ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைச் செய்யும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 9, 2023, 03:03 PM IST
  • உடல் எடையை குறைக்க முருங்கை பயனுள்ளதாக இருக்கும்.
  • மூட்டுவலிளுக்கும் முருங்கை மிகவும் நன்மை பயக்கும்.
  • இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.
வெயிட் லாஸ், நீரிழிவு மற்றும் மூட்டுவலிக்கு இந்த பொடிதான் ஒரே தீர்வு title=

முருங்கையின் ஆரோக்கிய நன்மைகள்: முருங்கையின் பண்புகள் காரணமாக, இது ஆயுர்வேதத்தில் அமிர்தமாக கருதப்படுகிறது. முருங்கை சாம்பார், வத்தக்குழம்பு மற்றும் காய்கறி போன்ற உணவுகளில் நாம் சேர்த்துக் கொள்கிறோம். சில மாநிலங்களில் இதன் இலைகள் மற்றும் பூக்களையும் சமைத்து உண்ணப்படுகின்றன. இதன் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தூள் உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக முருங்கையில் அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு கூறுகள் நிறைந்துள்ளன. இதனுடன் பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுக்களும் இதில் ஏராளமாக உள்ளன. இதனால் தான் முருங்கைக்காயை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. முருங்கையின் நன்மைகள் இத்துடன் நின்றுவிடாது, இது நமது ஆரோக்கியத்தையும்  மேம்படுத்த உதவுகிறது. எனவே முருங்கையின் மூன்று அற்புதமான நன்மைகள் என்னவென்று இங்கே பார்க்கலாம்.

முருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்  (Benefits of Eating Drumstick)

நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்
முருங்கைக்காயில் உள்ள ரிபோஃப்ளேவின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். முருங்கை, முருங்கை இலைகள் அல்லது பூக்கள் அனைத்தும் இதில் பயனுள்ளதாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கைக்காய் ஒரு அற்புதமான இயற்க்கை மருந்தாகும். இந்த நோயின் நன்மைக்காக காய்கறிகள் அல்லது சாம்பார் செய்து உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க | 40+ பெண்களுக்கான எச்சரிக்கை... மாரடைப்பின் ‘இந்த’ அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

சியாட்டிகா மற்றும் கீல்வாதத்தில் நன்மை பயக்கும்
சியாட்டிகா மற்றும் மூட்டுவலி நோயாளிகளுக்கும் முருங்கை மிகவும் நன்மை பயக்கும். மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற, முருங்கை மரத்தின் பட்டை பொடியை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இதற்கு முருங்கை பட்டை பொடியை தேனுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இது கபம் மற்றும் வாத பிரச்சனையையும் நீக்க உதவுகிறது.

எடை குறைப்பதில் நன்மை பயக்கும்
உடல் எடையை குறைக்க முருங்கை பயனுள்ளதாக இருக்கும். இதற்கு முருங்கை இலைகளைப் பயன்படுத்தலாம். முருங்கைக்காயில் காணப்படும் குளோரோஜெனிக் அமிலம் எடையைக் குறைக்க உதவுகிறது. முருங்கை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம், இது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது. இது தவிர, முருங்கை பொடி தேநீர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. 

கல்லீரலை பாதுகாக்க உதவும்
முருங்கை இலை மற்றும் பூக்களில் அதிக அளவில் உள்ள பாலிஃபீனால்கள் ஆக்சிஜனேற்றம் மற்றும் நச்சுக்களால் கல்லீரல் சேதம் அடைவதிலிருந்து பாதுகாக்கின்றது. கல்லீரல் கட்டிகள், ரிவர்ஸ் ,ஆக்சிஜனேற்றம் போன்றவற்றினால் கல்லீரல் சேதமடைவதிலிருந்து முருங்கை பாதுகாக்கிறது. கல்லீரல் என்சைம்களை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முருங்கை எண்ணெய் பயன்படுகிறது. ஆக்ஸிஜனேற்ற இறுக்கத்தை குறைப்பதற்கும் கல்லீரலில் புரோட்டீன் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இரத்தத்தில் நச்சுக்களை முறிப்பது, பித்த நீர் உற்பத்தி, ஃப்ரக்டோஸ் வளர்ச்சிதை மாற்றம், கொழுப்பினால் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றம், மற்றும் ஊட்டச்சத்துக்களை ஆற்றலாக மாற்றுதல் போன்ற செயல்பாடுகளுக்கு கல்லீரலே காரணமாகும் மேலும், இந்த செயல்பாடுகளை நிறைவு செய்ய கல்லீரலில் இருக்கும் என்சைம்களின் உதவியால் மட்டுமே செய்ய முடியும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் பருமன் பாடாய் படுத்துதா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க.. சுலபமா, வேகமா எடையை குறைக்கலாம்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News