மாரடைப்பினால் இறப்பாவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன் நந்திதா என்ற பெண், 40 வயதான தொழில்துறை வல்லுநர் மாரடைப்பினால் இறந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. 12 வயது மகனின் தாயாரான அவர், கடந்த சில மாதங்களாக முதுகு மற்றும் தோள்பட்டை வலி இருந்ததாக புகார் கூறி வந்தார். அலுவலக வேலை தொடர்பாக அடிக்கடி பயணம் செய்து வந்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு, மும்பையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏறியபோது, அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு, சில நிமிடங்களில் விமான நிலையத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மனதில் உள்ள கேள்வி, பெண்களும் இதயக் குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறார்களா என்பதுதான். ஏனெனில் இதய கோளாறு, மாரடைப்பினால் ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது.
இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் மாரடைப்பு பெரும்பாலும் ஆண்களிடமே காணப்படுவதால், அவருக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் பெண்களிடையே ஏற்படும் இறப்புகளில் 35% CVD காரணமாகும். கார்டியோவாஸ்குலர் நோய் என்னும் இருதய நோய்கள் (CVD) ஆண்களுக்கும் பெண்களுக்கும் மரணத்திற்கு முக்கிய காரணமாகும். பெண்கள் இருதயக் கோளாறுகளினால் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்களுக்கு ஏற்படும் இருதய நோய்க்கான அறிகுறிகள் என்ன, அதை எப்படித் தவிர்க்கலாம் என்பது குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
பெண்களில் இதய நோய்க்கான அறிகுறிகள்
பெண்களுக்கு இதயக் குறைபாடுகள் ஏற்படுவது குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், இளம் வயதிலேயே இதய செயலிழப்பு அல்லது இருதய நோய்களை பெண்கள் இப்போது சந்திக்கின்றனர். இதய நோயின் அறிகுறிகள் அல்லது கவலைக்குரிய காரணிகள் ஆண்களை விட பெண்களிடம் வித்தியாசமாக இருப்பதால் இது குறித்து பெரும்பாலானோருக்கு தெரியாமல் இருக்கலாம். உதாரணமாக, மார்பு வலி என்பது மாரடைப்புக்கான பொதுவான அறிகுறியாகும், ஆனால் வேறு பிற அறிகுறிகள் பெண்களில் தோன்றக்கூடும். அவை:
1. தாடை வலி
2. தோள்பட்டை வலி
3. மேல் முதுகு அல்லது மேல் வயிற்றில் வலி
4. வியர்வை
5. மயக்கம்
6. கை வலி
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை உடனடியாக கட்டுப்படுத்த.. இந்த 5 உணவுகள் உதவும்
பெண்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கான பொதுவான காரணிகள்
1. நீரிழிவு நோய்
2. அதிக கொழுப்புச்ச்த்து
3. உயர் இரத்த அழுத்தம்
4. உடல் பருமன்
பெண்களில் CVD நோய்க்கான பிற காரணங்கள்
1. மன அழுத்தம்
2. குறைவான தூக்கம்
3. குறைந்த உடல் செயல்பாடு
4. புகைபிடித்தல்
5. மரபணு காரணிகள்
6. மாதவிடாய் பிரச்சனை
பெண்களுக்கான CVD சிகிச்சை
இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சைகள் மிகவும் வேறுபட்டவை அல்ல. எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG), எக்கோ கார்டியோகிராம், ஆஞ்சியோகிராபி மற்றும் ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி (OCT) ஆகியவை நோயறிதலுக்கான முக்கிய தொழில்நுட்பங்கள். இதய நிலை கண்டறியப்பட்டவுடன், சிகிச்சையில் மருந்துகள், ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை ஆகியவை நோயின் வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து இருக்கலாம்.
பெண்களுக்கு ஏற்படும் இதயக் குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வு
பெண்களிடையே இதயம் தொடர்பான நோய்கள் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு அவர்களிடையே இன்னும் குறைவாகவே உள்ளது. பெண்களுக்கு இதயக் குறைபாடுகள் ஏற்படுவது குறித்த , பெண்கள் தங்கள் வழக்கமான பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியம். மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலும், பரிசோதனைகளை முழுமையாக செய்ய வேண்டும். இதனால் பெண்கள் சரியான நேரத்தில் நோயை கண்டறிந்து மாரடைப்பு அபாயத்தை தவிர்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.
மேலும் படிக்க | உருளைக்கிழங்கு ஆரோக்கியமானதா இல்லையா? சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ