அசிடிட்டி பிரச்சனையை போக்கும் அற்புத உணவுகள்! அமில சுரப்பை குறைக்க வீட்டு வைத்தியம்

Foods For Acidity: அசிடிட்டி பிரச்சனைகளை தீர்க்கும் உணவுகள்! வயிறு மற்றும் நெஞ்சு எரிச்சலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 2, 2023, 09:38 PM IST
  • வயிறு மற்றும் நெஞ்சு எரிச்சலா?
  • உடனடி நிவாரணம் அளிக்கும் உணவுகள்
  • உணவே மருந்து
அசிடிட்டி பிரச்சனையை போக்கும் அற்புத உணவுகள்! அமில சுரப்பை குறைக்க வீட்டு வைத்தியம் title=

அசிடிட்டிக்கான உணவுகள்: இன்றைய காலக்கட்டத்தில் அசிடிட்டி பிரச்சனை மக்களிடையே சகஜமாகி விட்டது. அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, டீ அல்லது காபியை அதிகமாக உட்கொள்வது, சில தவறான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதால் அமிலத்தன்மை ஏற்படலாம். அசிடிட்டி காரணமாக வயிற்றில் வாயு, நெஞ்சு எரிதல், புளிப்பு ஏப்பம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும். 

அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் தரும் (Foods For Acidity) உணவுகள்

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற, உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அசிடிடி பிரச்சனை இருந்தால், சில உணவுகளை உட்கொள்ளக்கூடாது என்று சொன்னால், சில உணவுகளை உட்கொள்வதால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.  

மேலும் படிக்க | பலன் தரும் பப்பாளி பக்கவிளைவும் தரும், இவர்கள் கட்டாயம் சாப்பிடக்கூடாது
 
அமிலத்தன்மைக்கு வாழைப்பழம் (Banana For Acidity)
அசிடிட்டி பிரச்சனையில் வாழைப்பழம் மிகவும் நன்மை பயக்கும். இதை உட்கொள்வது வயிற்றில் அமிலத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. இது அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் மற்றும் வாயு போன்ற செரிமான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. அமிலத்தன்மை இருந்தால், தினசரி ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடலாம்.  

diet

அசிடிட்டிக்கு மோர் (Buttermilk For Acidity)
அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற, மோர் அருந்தலாம். வயிற்றை குளிர்விப்பதுடன் நெஞ்செரிச்சலையும் குறைக்கிறது. ஒரு கிளாஸ் மோரில் புதினா மற்றும் சிறிது கருப்பு உப்பு சேர்த்து குடிக்கவும்.

மேலும் படிக்க | எந்த ஒயின் உங்களுக்கு ஒத்துக்கும்? காபியில் எது பெஸ்ட்? கண்டறியும் செயற்கை நுண்ணறிவு

அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும் சோம்பு (Fennel Seeds For Acidity)
பெருஞ்சீரகம் செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது வயிற்றுக்கு குளிர்ச்சியையும் சுகத்தையும் தருகிறது, இது அமிலத்தன்மையை குறைக்கிறது. சோம்பு எனப்படும் பெருஞ்சீரகத்தை பயன்படுத்தினால், வயிற்று எரிச்சல், வாயு மற்றும் அஜீரண பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

வயிற்றில் அமிலத்தன்மை இருந்தால், ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி அதை பருகவும். இதன் மூலம் அசிடிட்டியில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.

அசிடிட்டியை போக்கும் வெல்லம் (Jaggery For Acidity)
வெல்லம் உட்கொள்வது அமிலத்தன்மை பிரச்சனையை சீராக்கும். இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. உணவுக்குப் பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டால், உணவு செரிமானம் ஆவதோடு, வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வராது.

அமிலத்தன்மையை சீர் செய்யும் பாதாம் (Almonds For Acidity)
உடலில் அதிகமாக அமிலம் சுரந்தால், பாதாம் பருப்பை உட்கொள்ளலாம். இது வயிற்றில் சுரக்கும் அமிலத்தை இயல்பாக்க உதவுகிறது. பாதாம் உட்கொள்வதால் வயிறு மற்றும் மார்பில் எரியும் உணர்விலிருந்து நிவாரணம் கிடைக்கும். இருப்பினும், குறைந்த அளவு பாதாம் உட்கொள்வது உடலுக்கு நல்லது.  

மேலும் படிக்க | பலன் தரும் பப்பாளி பக்கவிளைவும் தரும், இவர்கள் கட்டாயம் சாப்பிடக்கூடாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News