wine tasting: எதுக்கெல்லாம் செயற்கை நுண்ணறிவு பயன்படும் என்ற கேள்வியே எழாத அளவுக்கு அதன் விஸ்தீரணம் அதிகரித்துக் கொண்டே செய்கிறது. அல்காரிதத்திற்குள் வடிவமைக்கப்பட்ட மனித உணர்வு அனுபவங்கள் மூலம் சுவை அறியும் வேலைகளையும் AI செய்கிறது
AI உடன் மதுவை சுவைக்கலாம் என்ற அளவுக்கு செயற்கை நுண்ணறிவு களத்தில் விஞ்ஞானிகள் உற்சாகமான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். ஒயின் வாங்கும் அனுபவத்தை மேம்படுத்த உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் செயலிகள் இருந்தாலும், உங்களுக்காக மதுவை சுவைக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?
புகைப்பட உதவி: Freepik ( All PIcs Courtesy)
செயற்கை நுண்ணறிவின் வேகமாக மாறிவரும் அடிவானத்தில் ஒரு புதிய வளர்ச்சியானது, மதுவை வாங்கலாமா வேண்டாமா என்பதை ஒரு தனி நபர் செய்யும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தலாம்.
டென்மார்க்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கோபன்ஹேகன் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து செய்துள்ள ஆராய்ச்சியில் தனிப்பட்ட சுவை மற்றும் சுவை பதிவுகள் தொடர்பான சுவராசியமான முடிவுகள் வெளியாகியுள்ளன.
மக்களின் சுவை இம்ப்ரெஷன்களைக் கொண்ட ஒரு அல்காரிதத்தின் மூலம், ஒருவருக்கு எந்த வகையான மது பிடிக்கும் என்பதை அல்காரிதம் துல்லியமாக கணிக்க முடியும் என்றால் எப்படி இருக்கும்? இந்த கேள்வியை கேட்கிறார் DTU மாணவர் தோரன்னா பெண்டர்
256 பங்கேற்பாளர்களுடன் ஒயின் சுவைகளை வழங்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள குழுவினர், சுவையில் உள்ள ஒற்றுமையின் அடிப்படையில் வெவ்வேறு ஒயின்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.
ஒயின் சுவைகளில் இருந்து, மக்களின் ஒயின் விருப்பங்களைப் பற்றிய துல்லியமான கணிப்புகளை உருவாக்குகிறது செயற்கை நுண்ணறிவு. இதற்கு அது படங்கள் மற்றும் உரை வடிவில் பாரம்பரிய தரவு வகைகளை மட்டுமே பயன்படுத்துகிறது.எனவே, மனித உணர்வு அனுபவங்களைப் பயன்படுத்த இயந்திரங்களுக்கு கற்பிப்பது பயனளிக்கும் சிறந்த அல்காரிதங்களை உருவாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்
ஒயினில் சிறந்தது எது என்பதைப் போலவே காபியில் சிறந்தது எது என்பதையும் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறியலாம்
ஒயினுக்காக செய்யப்படும் ஆராய்ச்சியே, பீருக்கும் பயன்படுத்தலாம். இன்னும் கொஞ்ச நாளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் ஆய்வுக் கட்டுரையின் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை புகைப்பட உதவி: Freepik ( All PIcs Courtesy)