உடல் எடையைக் குறைக்கும் உணவு: உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. அதிக எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. அதிகரிக்கும் எடையை குறைப்பது அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறோம்.
இந்தியாவில் சுவையான உணவுகளுக்குப் பஞ்சமில்லை, இதை விரும்புவோரின் பற்றாக்குறையும் இல்லை. ஆனால் இந்த உணவுகள் மெல்ல மெல்ல நம் உடலை பருமனாக மாற்றுகின்றன. வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேர்ந்துவிட்டால், அதைக் குறைப்பது மலையைச் சுமப்பது போல் கடினமாகிவிடும். சிலர் உடல் எடையை குறைக்க தினமும் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களை அதிகம் குறைத்துக்கொள்வார்கள். ஆனால் இதன் காரணமாக உடலில் பலவீனம் வர ஆரம்பிக்கிறது.
அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவைக் குறைப்பதற்குப் பதிலாக, ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது மிக முக்கியம். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல டயட்டீஷியன் டாக்டர் ஆயுஷி யாதவ், காலை உணவில் சில ஸ்பெஷல் பொருட்களை சாப்பிட்டால், உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும் என்று கூறுகிறார்.
காலை உணவில் இவற்றை சாப்பிட்டால் உடல் எடை குறையும்
1. ஓட்ஸ்
ஓட்ஸ் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவுப்பொருளாக உள்ளது. இது உங்கள் எடை அதிகரிப்பதைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது. தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல், எடையும் சீராக இருக்கும்.
மேலும் படிக்க | Weight Loss: ஒல்லியாவது சிம்பிள்! ‘இந்த’ பழக்கத்தை கொண்டு வந்தா ஈசியா எடை குறையும்
2. பலதானிய ரொட்டி மாவு / பிரெட்
நீங்கள் காலையில் கோதுமை மாவு ரொட்டி அல்லது வெள்ளை ரொட்டி சாப்பிடுகிறீர்கள் என்றால், இந்த பழக்கத்தை உடனடியாக மாற்றிக்கொள்ளுங்கள். இவற்றுக்கு பதிலாக பல தானிய மாவால் செய்யப்பட்ட சப்பாத்தி, அல்லது ரொட்டி (மல்டிகிரெயின் பிரெட்) உட்கொள்ளலாம். மல்டிகிரேன் ரொட்டி அல்லது அதன் பிரெட் மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் கட்டுக்கோபாக இருக்கும்.
3. கோதுமை ரவை / தலியா
கோதுமை ரவை ஒரு சத்தான உணவாகக் கருதப்படுகிறது, இது எடையைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது. இதை காய்கறிகள் போட்டு உப்புமா அல்லது கிச்சடி செய்து சாப்பிடலாம். அல்லது கஞ்சி செய்து உட்கொள்ளலாம். இது நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. இது எளிதில் ஜீரணிக்கப்படுவதால், எடையை அதிகரிக்காது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முக அழகை கெடுக்கும் இரட்டை கன்னம்... சில ‘எளிய’ தீர்வுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ